மாசாணியம்மன் கோவிலுக்கு சிறப்பு ரயில்! ஆனைமலை பயணிகள் நலச்சங்கம் தீர்மானம்| Dinamalar

தமிழ்நாடு

மாசாணியம்மன் கோவிலுக்கு சிறப்பு ரயில்! ஆனைமலை பயணிகள் நலச்சங்கம் தீர்மானம்

Added : நவ 15, 2021
Share
பொள்ளாச்சி: 'ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு ரயில் இயக்க வேண்டும்,' என, ஆனைமலை ரயில் பயணிகள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் செயல்படும் ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன், பாலக்காடு - பொள்ளாச்சி ரயில் நிறுத்தங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து, ஆனைமலை பகுதி மக்களின்

பொள்ளாச்சி: 'ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு ரயில் இயக்க வேண்டும்,' என, ஆனைமலை ரயில் பயணிகள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் செயல்படும் ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன், பாலக்காடு - பொள்ளாச்சி ரயில் நிறுத்தங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து, ஆனைமலை பகுதி மக்களின் ரயில்வே சார்ந்த தேவைகளை வலியுறுத்தி பெறும் நோக்கில், ஆனைமலை ரயில் பயணிகள் நலச்சங்கம், தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.சங்கத்தின் முதல் ஆலோசனை கூட்டம், ஆனைமலை ரோடு ஸ்டேஷனை அடுத்துள்ள சுப்பேகவுண்டன்புதுாரில் நடந்தது. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை, சங்க நிர்வாகிகள் முருகன் மற்றும் பிரசாத் செய்தனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன் வழித்தடத்தில் இயங்கும், எக்ஸ்பிரஸ்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும். ஆனைமலை ரோடு ஸ்டேஷனில் வசதிகளை மேம்படுத்தி, விரிவாக்கம் செய்ய வேண்டும்.மாசாணியம்மன் கோவிலுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக, மதுரையில் இருந்து ஆனைமலை ரோடு ஸ்டேஷன் வரை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.தற்போது, பாலக்காடு கோட்ட நிர்வாகத்தில் இருப்பதால், முக்கியத்துவம் இழந்துள்ள ஆனைமலை ரோடு ஸ்டேஷனை, மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை, ஆனைமலை சுற்றுப்பகுதி கிராம மக்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்ட வேண்டும். இவையுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.மேலும், சங்கத்தின் அடுத்த கூட்டம் வரும், 21ம் தேதி சுப்பேகவுண்டன்புதுார் சமுதாய கூடத்தில் நடத்தவும், அதில் அதிகளவிலான தன்னார்வலர்கள், பொதுமக்களை கட்சி பேதமின்றி பங்கேற்று, போராட்டம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X