தமிழ்நாடு

தோட்டம் தேடி வந்து உரம் விற்கறாங்களா! உஷாரா இருக்க விவசாயிகளுக்கு எச்சரிக்கை

Added : நவ 15, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: உரிமம் பெறாத அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் மற்றும் பிரதிநிதிகள் பரிந்துரைக்கும் மற்றும் விற்பனை செய்யும் உரங்களை பயன்படுத்துவதால், பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக, வேளாண் துறை எச்சரித்துள்ளது.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு வட்டார கிராமங்களில், முறையான உரிமம் பெறாத, அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களின் பிரதிநிதிகள், போலி உரங்களை

பொள்ளாச்சி: உரிமம் பெறாத அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் மற்றும் பிரதிநிதிகள் பரிந்துரைக்கும் மற்றும் விற்பனை செய்யும் உரங்களை பயன்படுத்துவதால், பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக, வேளாண் துறை எச்சரித்துள்ளது.பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு வட்டார கிராமங்களில், முறையான உரிமம் பெறாத, அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களின் பிரதிநிதிகள், போலி உரங்களை விவசாயிகளை நேரில் தேடிச்சென்று, தோட்டங்களிலேயே விற்கின்றனர்.இது குறித்து, கோவை வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி அறிக்கை:கிராமங்களில் அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் மற்றும் நபர்கள், தோப்பு மற்றும் தோட்டங்களுக்கு இயற்கை உரமிடுதல் என்ற பெயரில், எவ்வித அங்கீகாரமும் இல்லாத உரங்களை விவசாயிகளிடம் விற்கின்றனர்.
மேலும், பூச்சி கட்டுப்பாடு செய்து தருவதாக கூறி, வேர் வழி மருந்து செலுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.இவ்வாறு, அங்கீகாரம் மற்றும் உரிமம் பெறாத உரம் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்வதால், அதிக செலவு மற்றும் உரிய பலன் கிடைக்காமல் போகிறது. மேலும், பயிர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.எனவே, இது போன்ற நிறுவனங்கள், பிரதிநிதிகளிடம் உரம் மற்றும் மருந்து வாங்குவதையோ, பரிந்துரைகளை ஏற்பதையோ விவசாயிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.வேளாண்மை துறை அலுவலர்களின் ஆலோசனை பெற்று உரமிடுதல் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகளை அங்கீகாரம், உரிமம் பெற்ற உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளரிடமிருந்து உரிய விலையில் பெறுவது தான் பாதுகப்பானது.மேலும், இது போன்ற அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள், பிரதிநிதிகள் அணுகும் போது, அவர்கள் குறித்து வேளாண் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். அவர்கள் மீது, உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் - 1985 மற்றும் பூச்சி கொல்லி மருந்துச்சட்டம் - 1968ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X