தமிழ்நாடு

'ரிசர்வ் சைட்'களில் பூங்கா அமைக்கும் திட்டம்... தேர்தல் வாக்குறுதிக்கு மட்டும் பயன்படும் அவலம்: சொன்னாங்க... செஞ்சாங்களா!

Added : நவ 15, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை நகரில், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட, 'ரிசர்வ் சைட்'கள் உட்பட 18 இடங்களில், பூங்கா அமைக்கும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு, வரும் உள்ளாட்சி தேர்தலில் அரசியல்வாதிகள் வாக்குறுதிக்கு மட்டும் பயன்படும் நிலை உள்ளது. உடுமலை நகராட்சி, 7.41 சதுர கி.மீ., பரப்பில், 33 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. நகராட்சியில் சேகரமாகும் குப்பை அனைத்தும் தாராபுரம்
 'ரிசர்வ் சைட்'களில் பூங்கா அமைக்கும் திட்டம்...  தேர்தல் வாக்குறுதிக்கு மட்டும் பயன்படும் அவலம்: சொன்னாங்க... செஞ்சாங்களா!

உடுமலை: உடுமலை நகரில், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட, 'ரிசர்வ் சைட்'கள் உட்பட 18 இடங்களில், பூங்கா அமைக்கும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு, வரும் உள்ளாட்சி தேர்தலில் அரசியல்வாதிகள் வாக்குறுதிக்கு மட்டும் பயன்படும் நிலை உள்ளது.
உடுமலை நகராட்சி, 7.41 சதுர கி.மீ., பரப்பில், 33 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. நகராட்சியில் சேகரமாகும் குப்பை அனைத்தும் தாராபுரம் ரோட்டில், சிவசக்தி காலனி அருகே திறந்தவெளியில், கொட்டப்பட்டு வந்தது. இதனால், பல்வேறு பிரச்னைகளை அருகிலுள்ள குடியிருப்பு மக்கள் சந்தித்து வந்தனர். பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு, தி.மு.க., ஆட்சிக்காலத்தில், குப்பைக்கிடங்கு மூடப்பட்டு, வேறிடத்துக்கு மாற்றப்பட்டது. ஐந்து ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் இருந்த பழைய குப்பைக்கிடங்கில், தேங்கியிருந்த குப்பை அகற்றப்பட்டு, அப்பகுதி முழுவதும் மண் கொட்டி சமன்படுத்தப்பட்டது.


பூங்காவுக்கு ஏற்பாடு

உடுமலை நகரில், மக்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் இல்லாத நிலையில், பழைய குப்பைக்கிடங்கை பூங்காவாக மாற்ற, திட்டமிடப்பட்டது. ஆட்சிமாற்றத்திற்குப்பிறகு, அ.தி.மு.க., உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அனைவரும், சிவசக்தி காலனி அருகே, பூங்கா அமைப்பதாக வாக்குறுதி அளித்தனர். பின்னர், அப்பகுதியில், வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாகியும், எவ்வித மாற்றமும் அப்பகுதியில் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக, குப்பைக்கிடங்கு திறந்த வெளிக்கழிப்பிடமாகவும், சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறியுள்ளது.நகரில், குறைந்த பரப்பளவில், அண்ணா பூங்கா மட்டுமே உள்ள நிலையில், சிவசக்தி காலனி பூங்கா திட்டத்தை அனைத்து தரப்பு மக்களும், எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.


வீட்டுமனை ஒதுக்கீடு

இதே போல், நகரில், 'ரிசர்வ் சைட்'களில் இருந்த ஆக்கிரமிப்புகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன. அங்கு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், மக்கள் தேவைக்காகவும், 55 இடங்களில், பூங்கா அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், கம்பிவேலி அமைத்து, தகவல் பலகை மட்டுமே 'ரிசர்வ் சைட்'களில் வைக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டி கிடப்பதால், அவ்விடங்கள் மீண்டும் ஆக்கிரமிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நகர மக்களின் பொழுதுபோக்கிற்கு, பெயரளவுக்கு இருந்த அண்ணா பூங்காவும், மூடப்படும் நிலையில் உள்ளது. எனவே, பிற இடங்களிலும், பூங்கா அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.நகராட்சி அதிகாரிகளும், பல ஆண்டுகளாக இத்திட்டத்தை கண்டுகொள்ளவில்லை. உடுமலை நகராட்சி நுாற்றாண்டு விழாவையொட்டி, பல்வேறு வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட போதும், பூங்கா மேம்பாட்டை யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, வரும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், 'வார்டுதோறும் பூங்கா அமைப்போம்' என்ற அனைத்து கட்சி வேட்பாளர்களின், வாக்குறுதியை மறுபடியும் கேட்கும் அவல நிலை உடுமலை நகர மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X