வாக்காளர்களாக இணைய 3,271 பேர் விருப்பம்: சிறப்பு முகாம்களில் 4,479 விண்ணப்பம் | Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களாக இணைய 3,271 பேர் விருப்பம்: சிறப்பு முகாம்களில் 4,479 விண்ணப்பம்

Added : நவ 15, 2021
Share
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், புதிய வாக்காளர்களாக இணைய, 3,271 பேர் விண்ணப்பித்துள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது.வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி மையங்கள், அரசு அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும், 30ம் தேதி வரை, சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம்

உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், புதிய வாக்காளர்களாக இணைய, 3,271 பேர் விண்ணப்பித்துள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது.வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி மையங்கள், அரசு அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும், 30ம் தேதி வரை, சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.அதன் அடிப்படையில், 2022 ஜன., 1ம் தேதி, 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக சேரலாம் எனவும், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், www.nvsp.in என்ற இணைய தள முகவரியிலும், மொபைல் ஆப் வாயிலாக, விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து கொள்ள விண்ணப்பிக்கும் வகையில், ஓட்டுச்சாவடி மையங்களில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது.உடுமலை தொகுதியில், 294 ஓட்டுச்சாவடிகள், 125 மையங்களில் அமைந்துள்ளது. இம் மையங்களில் இரு நாட்கள் நடந்த முகாமில், புதிய வாக்காளர்களாக இணைய, ( படிவம்6) வழியாக, 1,970 பேர் விண்ணப்பித்திருந்தனர்.பட்டியில் பெயர் நீக்கம் செய்ய (படிவம் 7), 324 பேரும், திருத்தங்கள் மேற்கொள்ள ( படிவம் 8), 318 பேரும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் மேற்கொள்ள,(8ஏ) 162 பேரும் என, 2,774 பேர் விண்ணப்பித்தனர்.மடத்துக்குளம் தொகுதியில், புதிய வாக்காளர்களாக இணைய, 1, 301 பேரும், நீக்கல், 138 பேர், திருத்தம் மேற்கொள்ள, 177 பேரும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றத்திற்கு, 89 பேரும் என, 1,705 பேர் விண்ணப்பித்திருந்தனர்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'இரு தொகுதிகளிலும், இரண்டு நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள, 4,479 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது'.'வரும், 30ம் தேதி வரை, இணைய தளம் வழியாகவும், வரும், 27 மற்றும் 28 ம் தேதி ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பிக்கலாம்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X