செய்தி செய்தி

தமிழ்நாடு

தாலுகா தோறும் கட்டுப்பாட்டு அறை

Added : நவ 15, 2021
Share
Advertisement
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில், மழை பாதிப்புகளை சமாளிக்க, தாலுகாதோறும் பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அக்., மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. பருவமழை பாதிப்புகளை சமாளிக்க, தாலுகா

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில், மழை பாதிப்புகளை சமாளிக்க, தாலுகாதோறும் பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அக்., மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. பருவமழை பாதிப்புகளை சமாளிக்க, தாலுகா தோறும் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.மாவட்ட அளவில், வெள்ள பாதிப்பு, மழை பாதிப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண, மாவட்ட கட்டுப்பாட்டு அறையை, 1077, 0421 2971133, 2971199 என்ற எண்களில், 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். அனைத்து தாலுக்காக்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.மடத்துக்குளம் தாலுகா மக்கள், - 04252 252588 என்ற எண்ணிலும், உடுமலை -தாலுகா மக்கள் 04252 223857 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரமும் மாவட்ட, தாலுகா அளிவில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில், வெள்ளபாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X