தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் படுகொலை பாலக்காட்டில் பரபரப்பு சம்பவம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், எலப்புள்ளியை சேர்ந்தவர் சஞ்ஜித் 27. ஆர்.எஸ்.எஸ்., தொண்டரான இவர் நேற்று காலை மனைவி ஹர்ஷிதாவுடன், பைக்கில் சென்று கொண்டிருந்த போது, மம்புரம் பகுதியில் எதிரே காரில் வந்தவர்கள், பைக்கை நிறுத்தி, அரிவாளால் சஞ்ஜித்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.படுகாயமடைந்த சஞ்ஜித்தை அப்பகுதி மக்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தும்,



பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், எலப்புள்ளியை சேர்ந்தவர் சஞ்ஜித் 27. ஆர்.எஸ்.எஸ்., தொண்டரான இவர் நேற்று காலை மனைவி ஹர்ஷிதாவுடன், பைக்கில் சென்று கொண்டிருந்த போது, மம்புரம் பகுதியில் எதிரே காரில் வந்தவர்கள், பைக்கை நிறுத்தி, அரிவாளால் சஞ்ஜித்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.படுகாயமடைந்த சஞ்ஜித்தை அப்பகுதி மக்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி பலியானார். இதற்கிடையில், இச்சம்பவத்தை கண்டு மயங்கி விழுந்த மருதரோட்டை சேர்ந்த ராமு 56, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார். தனிப்படை அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி விஸ்வநாதன் தெரிவித்தார்.பலியான சஞ்ஜித்தின் உடலை காண, மாவட்ட அரசு மருத்துவமனையில் பா.ஜ.,வினர் திரண்டனர். பிரேதப் பரிசோதனைக்கு பின், சஞ்ஜித்தின் உடலை, எலப்புள்ளி வரை வாகன அணிவகுப்புடன், பா.ஜ.,வினர் எடுத்து சென்றனர்.சம்பவத்தை கண்டித்து, மலம்புழா தொகுதியில், நேற்று பிற்பகல் இரண்டு மணி முதல் 6 மணி வரை பா.ஜ.,வினர் அழைப்பு விடுத்த பந்த்தில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X