சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பெண்களின் பெயரில் சொத்து அவசியம்!

Added : நவ 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெண்களுக்கு என தனியாக சொத்து அல்லது முதலீடு அவசியம் என்கிறார், பிரபல முதலீட்டு ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன்: தமிழகத்தில், 7 சதவீத பெண்களுக்கு மட்டும் தான், அவர்களின் பெயர்களில் சொத்துகள் உள்ளன.மேலும், நாட்டிலேயே 2 சதவீத பெண்களின் பெயர்களில் தான் விவசாய நிலங்கள் உள்ளன. பிற விவசாய நிலங்கள் எல்லாம் ஆண்கள் பெயர்களில் தான் உள்ளன.வேலைக்கு செல்லும் பெரும்பாலான பெண்களின்
சொல்கிறார்கள்

பெண்களுக்கு என தனியாக சொத்து அல்லது முதலீடு அவசியம் என்கிறார், பிரபல முதலீட்டு ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன்: தமிழகத்தில், 7 சதவீத பெண்களுக்கு மட்டும் தான், அவர்களின் பெயர்களில் சொத்துகள் உள்ளன.மேலும், நாட்டிலேயே 2 சதவீத பெண்களின் பெயர்களில் தான் விவசாய நிலங்கள் உள்ளன. பிற விவசாய நிலங்கள் எல்லாம் ஆண்கள் பெயர்களில் தான் உள்ளன.வேலைக்கு செல்லும் பெரும்பாலான பெண்களின் ஏ.டி.எம்., கார்டுகள், அந்த பெண்களின் கணவர் அல்லது பெற்றோர் வசம் தான் உள்ளன. அந்த பெண் வேலைக்கு செல்லும் போதே, துவக்கத்திலேயே இவ்வாறு வைத்துக் கொள்கின்றனர் அல்லது கொடுத்து விடுகின்றனர்.
முதலிலேயே கொடுத்து விட்டு, பின் கேட்டால், குடும்பத்தில் குழப்பம் வரும் என்பதால், பெரும்பாலான பெண்கள் அந்த கார்டுகளை கேட்பதில்லை. கணவர் அல்லது பெற்றோர் தங்கள் விருப்பத்திற்கு அவற்றை பயன்படுத்துகின்றனர்.பொருளாதாரம் குறித்து ஓரளவுக்கு தெளிவு உள்ள பெண்கள் கூட, இந்த விஷயத்தில் கெட்டியாக இருப்பதில்லை.மேலும், தங்களுக்கு என தனியான முதலீடு, சேமிப்பு, சொத்துக்கள் அவசியம் என்பதை பெரும்பாலான பெண்கள் உணர்வதே இல்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

தன்னிச்சையாக தான் செய்யும் முதலீடு அல்லது சேமிப்பு, ஒரு வேளை நஷ்டமாகி விட்டால், கணவர் அல்லது அவரது குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமே என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.அதுபோல, தங்களது தவறான முடிவால் ஏற்படும் பாதிப்பு, குடும்பத்தை பல விதங்களில் பாதித்து விடுமே... குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தி விடுமே என பெண்கள் அஞ்சுகின்றனர்.முக்கியமாக கணவர் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது என்பதே, பெரும்பாலான பெண்களின் எண்ணமாக உள்ளது. இது போன்ற பத்தாம்பசலித்தனத்தை பெண்கள் விட்டொழிக்க வேண்டும்.தங்களுக்கு என தனியாக சேமிப்பு, முதலீடு செய்ய வேண்டும்; சொத்துக்களை வாங்க வேண்டும்; நிதி சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தங்க நகைகள் வாங்க அல்லது ஆடைகள் வாங்க எவ்வளவு ஆர்வமாக உள்ளோமோ, அது போன்ற ஆர்வத்தை சொத்துக்கள் தங்கள் பெயர்களில் வாங்கவும் காண்பிக்க வேண்டும்.

சுய வருமானம் உள்ள பெண்கள், தங்கள் பங்களிப்பு மற்றும் தன் கணவரின் பங்களிப்புடன் சொத்துக்களை வாங்கும் போது, தங்கள் பெயரில் சொத்துக் களை வாங்க வேண்டும்.ஏனெனில், கணவருடன் ஒற்றுமையாக இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய நேரிட்டால், ஏ.டி.எம்., கார்டு துவங்கி, சொத்துக்களை பிரிப்பது வரை பெரிய அவஸ்தை யாகி விடும். எனவே, பெண்களே சுதாரித்து கொள்ளுங்கள்; உங்கள் பெயரில் சொத்துக் களை வாங்குங்கள்!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
16-நவ-202114:44:17 IST Report Abuse
raja ...... சிஷ்யை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X