அரசியல் செய்தி

தமிழ்நாடு

விசாரணை கமிஷன் பழனிசாமி சவால்

Updated : நவ 17, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சேலம்:''முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சியினரை மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா, வெள்ளாளபுரம் மக்களுக்கு அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பழனிசாமி அளித்த பேட்டி:பருவ மழையின் போது, தி.மு.க., அரசு திட்டமிட்டு செயல்படாததால் தான், மழை
விசாரணை ,கமிஷன்  பழனிசாமி, சவால்

சேலம்:''முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சியினரை மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா, வெள்ளாளபுரம் மக்களுக்கு அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பழனிசாமி அளித்த பேட்டி:பருவ மழையின் போது, தி.மு.க., அரசு திட்டமிட்டு செயல்படாததால் தான், மழை நீரால் மக்கள் இந்த அளவுக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரி நீர் திட்டம், செயல்பட்டு முடித்திருக்க வேண்டும். தி.மு.க., ஆட்சி அமைந்து ஆறு மாதங்களில் இந்த திட்டப் பணிகளில் சுணக்கம் காட்டியதால், மேட்டூர் உபரி நீரை, 100 ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் தாமதம் ஆகியுள்ளது.
பருவ மழை காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறி கடலில் கலக்கும் தண்ணீரை, ஏரிகளுக்கு நிரப்பினால் இப்பகுதியே செழிப்பாக மாறும். திட்டப் பணிகளில் 60 சதவீதம் முடிந்துள்ளது.

இதை விரைவாக முடித்து, 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.எங்கள் ஆட்சியில் நடந்த, குடிமராமத்து திட்டத்தில் ஏரி, ஆறு, குளங்கள் துார் வாரப்பட்டதால் தான் தற்போது பெய்துள்ள மழை நீரால் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. வெள்ள நீர் தேங்கியது குறித்து, குற்றச்சாட்டை நாங்கள் கூறினோம்.

ஆனால், இவற்றை சரி செய்யாமல் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சியினரை மிரட்டும் தொனியில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என பேசி வருகிறார். எங்கள் ஆட்சியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.விசாரணை கமிஷன் அமைத்தாலும் கவலையில்லை. நாங்கள் போட்ட திட்டங்களை தான் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அவர் புதிதாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
18-நவ-202111:37:12 IST Report Abuse
sankar அய்யா வெங்கடசுப்ரமணி, நீ பச்சை திராவிடத் தமிழனா? அதனால் தான் உன் தமிழ் சரியாக இல்லை. ஊரியஊறிய எது சரி? ஆங்கிலமாவது தவறின்றி எழுத வருமா?
Rate this:
Cancel
16-நவ-202117:21:49 IST Report Abuse
அப்புசாமி உங்களோட திட்டங்களில் ஆட்டையப் போட பணமே இல்லியாம். எல்லாத்தையும் உங்க ஆளுங்களே சொரண்டிட்டாங்களாம். அதான் கோவம்.விசாரணை கமிஷன் எல்லாம்.
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
16-நவ-202113:34:40 IST Report Abuse
Nagercoil Suresh "வெள்ள நீர் தேங்கியது குறித்து" வெள்ளம் வேற நீர் வேறயா? இது ஏன் இப்படி இருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X