அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மக்களுக்கு குடையாக தி.மு.க., அரசு திகழும்'

Updated : நவ 17, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை :'மழையிலும், வெயிலிலும், மக்களுக்கு குடையாக தி.மு.க., அரசு திகழும். எந்நாளும் மக்களுடனேயே இருப்போம்; மாநிலத்தை காப்போம்' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தி.மு.க., தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: பருவமழை துவங்குவதற்கு முன்னரே, வடிகால்களை சீரமைக்கும் பணிகளை, அரசு நிர்வாகம் விரைவாக மேற்கொண்டது. அதனால் தான், சென்னையில் நவ., 6ம் தேதி இரவு துவங்கி, 11ம்
'மக்கள்,குடை, தி.மு.க., அரசு திகழும்'

சென்னை :'மழையிலும், வெயிலிலும், மக்களுக்கு குடையாக தி.மு.க., அரசு திகழும். எந்நாளும் மக்களுடனேயே இருப்போம்; மாநிலத்தை காப்போம்' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: பருவமழை துவங்குவதற்கு முன்னரே, வடிகால்களை சீரமைக்கும் பணிகளை, அரசு நிர்வாகம் விரைவாக மேற்கொண்டது. அதனால் தான், சென்னையில் நவ., 6ம் தேதி இரவு துவங்கி, 11ம் தேதி வரை தொடர்ச்சியாக, அதி கனமழை பெய்த நிலையிலும், 2015 போல வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. பல இடங்களில் தேங்கிய மழை நீர், உடனடியாக அகற்றப்பட்டது. சில இடங்களில், தவிர்த்திட இயலாத

காரணங்களால், சற்று காலதாமதமான போதும் பணிகள் தொடர்ந்து சரியாக நடந்தன.


மாவட்டங்களில் ஆய்வுநவ., 7 முதல் பாதிப்புகளை ஆய்வு செய்தேன். மக்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய உதவிகளை செய்திட, உடனடியாக நடவடிக்கை எடுத்தேன். அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி நிர்வாகத்தினர், மக்கள் நல்வாழ்வு துறையினர், வருவாய் துறையினர், பொறியாளர்கள்.துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண பணிகளை மிகுந்த பொறுப்புடன் செய்தனர்.நவம்பர், 12ல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு செய்தேன்.

பொதுமக்கள் நேரில் வந்து, தங்களது குறைகளையும், தேவைகளையும் தெரிவித்தனர். பலருக்கு நிவாரண பொருட்களை வழங்கிடும் வாய்ப்பு அமைந்தது. மாநிலம் முழுதும் பெய்த பருவமழையால், டெல்டா மாவட்டங்களில் மக்கள் நலன் காக்க, ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து, ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கனமழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்ட மக்களின் துயர் துடைக்கும் கரமாக,உங்களில் ஒருவனான எனது கரம் இருக்கும். ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும், மழை நீர் தேங்காத வகையில், கட்டமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அரசு உறுதி எடுத்துள்ளது.


தலையாய கடமைஅதற்கேற்ற வகையில், உள்ளாட்சி நிர்வாகம் முடுக்கி விடப்படும். தமிழகம் முழுதும் தொலைநோக்கு பார்வையுடனான, மழை நீர் வடிகால் கட்டமைப்பை உருவாக்கி, நீர் ஆதாரங்களை பெருக்குவதே, நம் அரசின் தலையாய நோக்கமாகும்.ஒவ்வொரு திட்டத்திலும், அ.தி.மு.க., ஆட்சியாளர்கள் நடத்திய ஊழல்கள் களையப்படும். அவர்களின் மலிவான அரசியல் நோக்கத்திலான, விமர்சனங்களை புறந்தள்ளி, மக்களுக்கான பணியில், அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படும். பேரிடர் காலத்தில், மக்களை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது, நமது அரசின் தலையாய கடமை. மழையிலும், வெயிலிலும் மக்களுக்கு குடையாக, அரசு திகழும் என்று உறுதியை வழங்குகிறேன். எந்நாளும் மக்களுடனேயே இருப்போம்; மாநிலத்தை காப்போம்.இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanujan - Nagercoil,இந்தியா
17-நவ-202112:21:00 IST Report Abuse
Ramanujan Boat ஆகவும் இருப்போம். மழை வரும். தண்ணீர் தேங்கும். நாங்கள் உங்களுக்கு படகு தருவோம் தப்பிக்க.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
16-நவ-202122:20:45 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இருக்கலாம் ஆனா தேவையான நேரத்துல குடை உதவல
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
16-நவ-202122:04:40 IST Report Abuse
Priyan Vadanad மாண்புமிகு முதல்வர் சொன்னது தற்காலிக நிவாரரணம். மக்கள் விரும்புவது நிரந்தர நிவாரணம். பாஜக போல, மாஜி ஆட்சியை குறைசொல்லிக்கொண்டிருக்காமல் ஆக்கபூர்வமாகசெயல்படலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X