தமிழகத்திற்கு ஒரே நாளில் 53.43 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு ஒரே நாளில் 53.43 லட்சம் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள்

Added : நவ 15, 2021
Share
சென்னை: தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில், 53.43 லட்சம் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் வந்துள்ளன.தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நவ., 30ம் தேதிக்குள், தகுதியான அனைவருக்கும், முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன், அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில்
தமிழகத்திற்கு ஒரே நாளில் 53.43 லட்சம் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள்

சென்னை: தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில், 53.43 லட்சம் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் வந்துள்ளன.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நவ., 30ம் தேதிக்குள், தகுதியான அனைவருக்கும், முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன், அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று, 53.43 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இவை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, மாநில மருந்து கிடங்கில் வைக்கப்பட்டு, தேவையான மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

தற்போது தமிழக அரசிடம், 1.25 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 113 கோடி 'டோஸ்'நாட்டில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசி 'டோஸ்' எண்ணிக்கை 113 கோடியை எட்டியுள்ளது. கொரோனா தடுப்பூசி பணிகள் தடையின்றி தொடர்கிறது. நேற்று ஒரே நாளில் இரவு 9:00 மணி நிலவரப்படி 59 லட்சத்திற்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தன.இதனால், இதுவரை மக்களை சென்றடைந்த ஒட்டுமொத்த டோஸ் எண்ணிக்கை 113 கோடியை எட்டி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X