காரைக்கால் வந்தது 90 ஆயிரம் டன் உரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்கால் வந்தது 90 ஆயிரம் டன் உரம்

Added : நவ 15, 2021
Share
நாகப்பட்டினம் : வெளிநாடுகளில் இருந்து 90 ஆயிரம் டன் யூரியா உரம், கப்பல்கள் வாயிலாக காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு வந்துள்ளது.டெல்டா மாவட்டங்களில், 5 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடந்துள்ளது. நாகை மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்துள்ளது. பயிர்கள் சூல் விடும் பருவத்தில் எதிர்பாராத கன மழையால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில்,
 காரைக்கால் வந்தது 90 ஆயிரம் டன் உரம்

நாகப்பட்டினம் : வெளிநாடுகளில் இருந்து 90 ஆயிரம் டன் யூரியா உரம், கப்பல்கள் வாயிலாக காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில், 5 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடந்துள்ளது. நாகை மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்துள்ளது. பயிர்கள் சூல் விடும் பருவத்தில் எதிர்பாராத கன மழையால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில், இந்தோனேஷியா மற்றும் சீனாவில் இருந்து இரு கப்பல்களில் 90 ஆயிரம் டன் யூரியா உரம், காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உரத்தை, மூட்டைகளில் அடைக்கும் பணி நடந்து வருகிறது.கலெக்டர் அருண்தம்புராஜ், துறைமுகத்தில் சாக்கு பைகளில் உரங்கள் அடைக்கப்படுவதை நேற்று பார்வையிட்டார்.அருண்தம்புராஜ் கூறுகையில், ''விவசாயிகள் நலன் கருதி, தமிழக அரசின் முயற்சியால் 90 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, தமிழகத்திற்கு 30 ஆயிரம் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,500 டன் யூரியா, வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X