பொது செய்தி

தமிழ்நாடு

பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு! 3 மகன்களால் ஆபத்து என கதறும் தம்பதி

Added : நவ 15, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம் : நாகை எஸ்.பி., அலுவலகத்தில் மூத்த தம்பதி, தங்களது மூன்று மகன்களிடம் இருந்து உயிருக்கு பாதுகாப்பு கோரி மனு அளித்தனர்.நாகை மாவட்டம், கொந்தகையைச் சேர்ந்தவர் சிங்காரவேலு, 92; மனைவி மாணிக்கம், 80. இருவரும் நேற்று நாகை எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு:எங்களுக்கு மகன்கள் துரைராஜ், வீரையன், பழனி, முத்து ஆகியோர் உள்ளனர். வீரையன் இறந்து விட்டார். மற்றவர்கள் திருமணமாகி
 பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு! 3 மகன்களால் ஆபத்து என கதறும் தம்பதி

நாகப்பட்டினம் : நாகை எஸ்.பி., அலுவலகத்தில் மூத்த தம்பதி, தங்களது மூன்று மகன்களிடம் இருந்து உயிருக்கு பாதுகாப்பு கோரி மனு அளித்தனர்.

நாகை மாவட்டம், கொந்தகையைச் சேர்ந்தவர் சிங்காரவேலு, 92; மனைவி மாணிக்கம், 80. இருவரும் நேற்று நாகை எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு:எங்களுக்கு மகன்கள் துரைராஜ், வீரையன், பழனி, முத்து ஆகியோர் உள்ளனர். வீரையன் இறந்து விட்டார். மற்றவர்கள் திருமணமாகி தனி, தனியே சென்று விட்டனர். அவர்கள், எங்களை கவனிப்பதில்லை.

மாணிக்கத்திற்கு, அவரது தந்தை அளித்த இடத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வருகிறோம்.எங்களின் குடிசை கூரை கீற்று சேதமடைந்துள்ள நிலையில், அதை சீரமைக்க கூடாது என மகன்கள் தடுக்கின்றனர். அந்த இடத்தை தங்களுக்கு எழுதி தர வேண்டும் என வற்புறுத்தினர். நாங்கள் உடன்படாததால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். என் மூன்று மகன்களால், எந்நேரமும் ஏதாவது ஆபத்து நேரும்.

உயிருக்கு பாதுகாப்பு கோரி, திட்டச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தோம். அங்கு நடவடிக்கை இல்லாததால், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாணிக்கம் கூறுகையில், ''மகன்கள் யாரும் எங்களை பாதுகாக்கவில்லை. எங்களுக்கு சொந்தமாக வீடு மட்டுமே உள்ளது.''மெயின் ரோட்டில் வீடு உள்ளதால், எழுதி தர வலியுறுத்தி, மகன்களுடன் சேர்ந்து பேரப் பிள்ளைகளும் மிரட்டுகின்றனர். எங்களுக்கு ஏதாவது ஆபத்து நேரும் என்பதால், போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X