பொது செய்தி

இந்தியா

நிலக்கரி பயன்பாடு குறைப்பு: இந்தியாவுக்கு சீனா ஆதரவு

Added : நவ 15, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பீஜிங் :பருவ நிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்ளும் வகையில், நிலக்கரி பயன்பாடு குறித்த நம் நாட்டின் கருத்துக்கு அண்டை நாடான சீனா ஆதரவு அளித்துள்ளது.ஐ.நா.,வின் பருவ நிலை மாறுபாடு தொடர்பான, சி.ஓ.பி., - 26 மாநாடு, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்தது. இதில் இந்தியா வலியுறுத்தியதன் அடிப்படையில், 'நிலக்கரி பயன்பாட்டை திடீரென முற்றிலுமாக நிறுத்தாமல்
நிலக்கரி, பயன்பாடு, குறைப்பு, இந்தியா, சீனா, ஆதரவு

பீஜிங் :பருவ நிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்ளும் வகையில், நிலக்கரி பயன்பாடு குறித்த நம் நாட்டின் கருத்துக்கு அண்டை நாடான சீனா ஆதரவு அளித்துள்ளது.
ஐ.நா.,வின் பருவ நிலை மாறுபாடு தொடர்பான, சி.ஓ.பி., - 26 மாநாடு, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்தது.

இதில் இந்தியா வலியுறுத்தியதன் அடிப்படையில், 'நிலக்கரி பயன்பாட்டை திடீரென முற்றிலுமாக நிறுத்தாமல் படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம்' என, ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியான் கூறியதாவது:


latest tamil news



பருவ நிலை மாறுபாடு பிரச்னையில் வளர்ந்த நாடுகள் முதலில் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்த வேண்டும். மாசில்லா எரிபொருளுக்கு மாறுவதற்கு, வளர்ந்து வரும் நாடுகளுக்கும் அவை பொருளாதார ரீதியிலும் உதவ வேண்டும்.தற்போது உள்ள எரிபொருள்கள் ஆதாரம் மற்றும் தேவையை ஈடு செய்யும் வகையில், மாசில்லா எரிபொருளுக்கு மாறுவதற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு அவகாசம், வாய்ப்பு தர வேண்டும். இதைத் தான் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அதை நாங்களும் ஆமோதிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
16-நவ-202113:35:25 IST Report Abuse
Vittalanand இருத்திக் கட்டம் அனு மிசாரமே. சும்மா கூப்பாடு போடுவதால் பொருள் இல்லை. அது போலவே நடமாடும் இயந்திரங்களுக்கு மின்சாரமே.
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
16-நவ-202108:56:26 IST Report Abuse
Kalyan Singapore சீனா உருவாக்கும் Thorium Nuclear Reactor தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு தந்தாலே போதும் நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக குறைத்து விடலாம்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
16-நவ-202106:15:08 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஏன்னா அப்பத்தானே சோலார் கருவிகளை இந்தியா சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X