பொது செய்தி

தமிழ்நாடு

சந்தோஷ் மிஸ்ரா விருப்ப ஓய்வு

Added : நவ 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : தமிழக போக்குவரத்து துறை கமிஷனராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ் கே மிஸ்ரா விருப்ப ஓய்வில் சென்றதால், புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ் கே மிஸ்ரா. இவர் 1971ம் ஆண்டு செப்., 12ல் உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் பிறந்தார். 2000ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று, தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி
 சந்தோஷ் மிஸ்ரா விருப்ப ஓய்வு

சென்னை : தமிழக போக்குவரத்து துறை கமிஷனராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ் கே மிஸ்ரா விருப்ப ஓய்வில் சென்றதால், புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ் கே மிஸ்ரா. இவர் 1971ம் ஆண்டு செப்., 12ல் உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் பிறந்தார். 2000ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று, தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி உள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை கமிஷனர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், போக்குவரத்து துறை கமிஷனராக மாற்றப்பட்டார். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக, விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாக அரசிடம் கடிதம் அளித்துள்ளார். அதை ஏற்று, அரசு அவரை பணியில் இருந்து விடுவித்துள்ளது.அதைத் தொடர்ந்து, போக்குவரத் துறை கமிஷனராக, துறை சிறப்பு செயலராக இருந்த நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krush - Pallavaram, Chennai,இந்தியா
16-நவ-202115:35:40 IST Report Abuse
Krush சாப்பாட்டுல உப்பு போட்டு சாப்பிடுவார் போல இருக்கு..
Rate this:
selva - Chennai,இந்தியா
18-நவ-202115:44:52 IST Report Abuse
selvaஇத LIC விக்கிற ஆள் சொல்லக்கூடாது... போயி எங்கயாவது பெரிய வடை சுடு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X