கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இலங்கை தாதா கூட்டாளிகள் இருவருக்கு 'கஸ்டடி' கேட்டு மனு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை : இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் இருவரை, 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இலங்கையில், நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா, 36. கோவை, சேரன் மாநகர்பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில், காதலி அம்மானி தான்ஜியுடன் இரண்டு ஆண்டுகள் ரகசியமாக வசித்து வந்தார்.உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், 2020 ஜூலை 4ல் உயிரிழந்தார். கோவை
 இலங்கை தாதா கூட்டாளிகள் இருவருக்கு 'கஸ்டடி' கேட்டு மனு

கோவை : இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் இருவரை, 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில், நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா, 36. கோவை, சேரன் மாநகர்பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில், காதலி அம்மானி தான்ஜியுடன் இரண்டு ஆண்டுகள் ரகசியமாக வசித்து வந்தார்.உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், 2020 ஜூலை 4ல் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்று சென்று, மதுரையில் தகனம் செய்தனர்.

கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த அவரது காதலி அம்மானி தான்ஜி மற்றும் மதுரை வக்கீல் சிவகாமி சுந்தரி, திருப்பூர் தியானேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.இந்நிலையில், பெங்களூரில் பதுங்கியிருந்த, அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் சனுக்கா தனநாயகா, 38, கோபாலகிருஷ்ணன், 46, ஆகியோரை போலீசார் 13ம் தேதி கைது செய்து, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இருவரையும், ஐந்து நாட்கள் போலீஸ் 'கஸ்டடி'யில் விசாரிக்க அனுமதி கோரி, கோவை சி.ஜே.எம்., நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இருவரையும் இன்று பிற்பகல் 3:00 மணிக்கு ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X