பொது செய்தி

தமிழ்நாடு

வங்கக்கடலை அடுத்து அரபிக்கடலிலும் காற்றழுத்த தாழ்வு

Updated : நவ 16, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை :வங்கக்கடலை தொடர்ந்து, அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அடுத்தடுத்து இரண்டு புயல் சின்னங்கள் உருவாவதால், தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளையும், நாளை மறுதினமும் சென்னையில் பெருமழை கொட்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல், 20 நாட்களாக
வங்கக்கடல், அரபிக்கடல், காற்றழுத்த ,தாழ்வு

சென்னை :வங்கக்கடலை தொடர்ந்து, அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அடுத்தடுத்து இரண்டு புயல் சின்னங்கள் உருவாவதால், தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் சென்னையில் பெருமழை கொட்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல், 20 நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. மாநிலம் முழுதும் மிக கன மழையை கொட்டி, சென்னை முதல் குமரி வரை வெள்ளப்

பெருக்கையும் ஏற்படுத்திஉள்ளது.

இதனால், பருவ கால இயல்பு மழை அளவை முன்கூட்டியே எட்டிஉள்ளது. இந்நிலையில், மேலும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


காற்றழுத்த பகுதிகள்இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் அளித்த பேட்டி:வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, நாளை மறுதினம், தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு இடையே கரையை நெருங்கும்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை பொறுத்தவரை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு குறைவு. வரும் நாட்களில் வானிலை மாற்றத்தை பொறுத்தே, தாழ்வு பகுதி வலுப்பெறுமா என்பது தெரியவரும்.அதேபோல, அரபிக்கடலிலும், கேரளா, கர்நாடகத்தை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையானது, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும் இடையே தொடர்பு ஏற்படுவதால், இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்.


latest tamil newsசென்னைக்கு கன மழைவரும் நாட்களுக்கான மழையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும். ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்.திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிக கன மழை பெய்யும்.வரும் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். வட மாவட்டங்கள், புதுச்சேரியில் கன மழை பெய்யும். நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் வளவனுாரில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், 10 செ.மீ., பதிவாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


மீனவர்களுக்கு எச்சரிக்கைமத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக வடக்கு பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.கேரளா, கர்நாடக கடலோரம், மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, குறிப்பிட்ட நாட்களுக்கு மீனவர்கள், இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
16-நவ-202121:04:07 IST Report Abuse
Kundalakesi Insects t to reproducte more after rains. So ancient Tamilians celebrated karthigai lamp festival where the insects would fall in fire and vanishes. Tamilan kondadum vizhakkal vaalkai vazhaluvatharkaga
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
16-நவ-202121:02:36 IST Report Abuse
Kundalakesi Karthigai pirantha mazhai nindru vidum.
Rate this:
Cancel
LION Bala - Tuticorin,இந்தியா
16-நவ-202113:27:51 IST Report Abuse
LION Bala தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய தென் மாவட்டங்களின் நகர்ப்புறங்களில் மழை சரிவர பெய்யவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X