பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் உரத்தட்டுப்பாடு; போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை

Added : நவ 15, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரை உரக்கடைகளில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து தனியார் உரக்கடையில் போலீஸ் பாதுகாப்போடு உர விற்பனை நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்ததால் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.தேவையான நீர் இருப்பு உள்ளதால் தற்போது விவசாயிகள் நெற்பயிருக்கு உரமிடும் பணிகளை
 மானாமதுரையில் உரத்தட்டுப்பாடு;   போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை

மானாமதுரை : மானாமதுரை உரக்கடைகளில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து தனியார் உரக்கடையில் போலீஸ் பாதுகாப்போடு உர விற்பனை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்ததால் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.தேவையான நீர் இருப்பு உள்ளதால் தற்போது விவசாயிகள் நெற்பயிருக்கு உரமிடும் பணிகளை துவுக்கியுள்ளனர்.ஆனால் மானாமதுரையில் உள்ள கூட்டுறவு விவசாய சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் உரத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் உரக்கடைக்கு உரம் வந்ததை அடுத்து சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் உரம் வாங்க கூடினர். அங்கு போலீஸ் பாதுகாப்போடு உர விற்பனை இரவு முழுவதும் நடைபெற்றது.

விவசாயிகள் கூறுகையில்,தற்போது இந்த வருடம் நல்ல மழை பெய்து பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகின்ற நேரத்தில் உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகாலையிலேயே கடைகளுக்கு சென்று வரிசையில் நின்றாலும் சிலருக்கு தான் உர மூடை கிடைக்கிறது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X