சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷ வாயு கசிவு; பலி 3 ஆக உயர்வு

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில் விஷவாயு தாக்கிய சம்பவத்தில், பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.திருப்பூர் - பல்லடம் ரோடு, கொத்துக்காடு தோட்டத்தில், 'பேன்டோன் டையர்ஸ்' என்ற சாய ஆலை செயல்படுகிறது. ஆலையில் உள்ள ரசாயனங்கள் அடங்கிய கழிவு நீர் தொட்டியை நேற்று முன்தினம் சுத்தம் செய்தபோது, தொழிலாளி ராமகிருஷ்ணன், 50, விஷ வாயு தாக்கி அலறினார்.அவரை காப்பாற்ற முயன்ற வடிவேல், 32; ஆலை
 விஷ வாயு கசிவு; பலி 3 ஆக உயர்வு

திருப்பூர் : திருப்பூரில் விஷவாயு தாக்கிய சம்பவத்தில், பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

திருப்பூர் - பல்லடம் ரோடு, கொத்துக்காடு தோட்டத்தில், 'பேன்டோன் டையர்ஸ்' என்ற சாய ஆலை செயல்படுகிறது. ஆலையில் உள்ள ரசாயனங்கள் அடங்கிய கழிவு நீர் தொட்டியை நேற்று முன்தினம் சுத்தம் செய்தபோது, தொழிலாளி ராமகிருஷ்ணன், 50, விஷ வாயு தாக்கி அலறினார்.

அவரை காப்பாற்ற முயன்ற வடிவேல், 32; ஆலை மேலாளர் தினேஷ் பாண்டி, 32 ஆகியோர், விஷ வாயு தாக்கி பலியாகினர். மேலும் தொழிலாளி நாகராஜ், 48, எலக்ட்ரீஷியன் ராஜேந்திரன், 55 ஆகியோர் மயங்கினர். ராமகிருஷ்ணன் உயிர் தப்பினார்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் நேற்று அதிகாலை இறந்தார். நாகராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமி, 48 மீது, வீரபாண்டி போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் புகழேந்தி சாய ஆலையில், நேற்று ஆய்வு செய்து, 'நோட்டீஸ்' வழங்கினார். ஆலை மீது வழக்கு தொடரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு பெற்று தரவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X