சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான வாலிபர் உடல் மீட்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே, பெண்ணையாற்றில் குளித்தபோது மாயமான வாலிபரின் உடலை தீயணைப்பு துறையினர் நேற்று மீட்டனர்.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் பெண்ணையாற்றில், 10 நாட்களாக இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் ஓடுகிறது. நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டைச் சேர்ந்த தே.மு.தி.க., நகர பொருளாளர் நாகராஜ் மகன் மாதவன், 21; மகள் மாளவிகா, 21; இரட்டைர்கள்.
 மாயமான வாலிபர் உடல் மீட்பு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே, பெண்ணையாற்றில் குளித்தபோது மாயமான வாலிபரின் உடலை தீயணைப்பு துறையினர் நேற்று மீட்டனர்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் பெண்ணையாற்றில், 10 நாட்களாக இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் ஓடுகிறது. நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டைச் சேர்ந்த தே.மு.தி.க., நகர பொருளாளர் நாகராஜ் மகன் மாதவன், 21; மகள் மாளவிகா, 21; இரட்டைர்கள். முத்துலிங்கம் மகன் லோகேஷ், 18 உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள், போலீசார் எச்சரிக்கையை மீறி, நேற்று முன்தினம் ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

இதில் மாதவன், மாளவிகா, லோகேஷ் ஆகியோர்தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மாளவிகா, லோகேஷ் உடல்களை அன்று இரவு மீட்டனர். நேற்று காலை 10:00 மணிக்கு மாதவன் உடல் மீட்கப்பட்டது.மாளவிகா தண்ணீரில் நின்றபடி, தன் மொபைல் போனில் அனைவருடன் செல்பி எடுத்து, நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதை, சோகத்துடன் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X