பொது செய்தி

தமிழ்நாடு

முல்லைப் பெரியாறில் 141 அடி நீர் சேமிக்க முடிவு

Added : நவ 15, 2021
Share
Advertisement
சென்னை : முல்லைப் பெரியாறு அணையில் 'ரூல் கர்வ்' விதிப்படி, வரும் 20ம் தேதி 141 அடிக்கு நீரை சேமிக்க நீர்வளத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.முல்லைப் பெரியாறு அணையின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை, தமிழக நீர்வளத் துறை மேற்கொண்டு வருகிறது. அணையில், 142 அடிக்கு, 7.66 டி.எம்.சி., அளவிற்கு நீரை சேமிக்க, 2014ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரளாவை சேர்ந்த தனி நபர் தொடர்ந்த
முல்லைப் பெரியாறில்  141 அடி நீர் சேமிக்க முடிவு

சென்னை : முல்லைப் பெரியாறு அணையில் 'ரூல் கர்வ்' விதிப்படி, வரும் 20ம் தேதி 141 அடிக்கு நீரை சேமிக்க நீர்வளத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை, தமிழக நீர்வளத் துறை மேற்கொண்டு வருகிறது. அணையில், 142 அடிக்கு, 7.66 டி.எம்.சி., அளவிற்கு நீரை சேமிக்க, 2014ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரளாவை சேர்ந்த தனி நபர் தொடர்ந்த வழக்கில், ஒவ்வொரு நாளும் தேக்க வேண்டிய நீரின் அளவை, ஜன., மாதம் உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்தது.

சட்டசபை தேர்தல் நெருங்கியதால், இந்த ரூல் கர்வ் நடைமுறையை எதிர்த்து, அப்போதைய அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு தெரியாத வகையில், இதுகுறித்த தகவலை வெளியிடாமல் நீர்வளத் துறையினர் அடக்கி வாசித்தனர்.

தற்போது இத்தகவல் அம்பலமாகியுள்ளது. அதன்படி, நவ., 30ம் தேதிக்கு பின்னரே 142 அடிக்கு நீரை தேக்க முடியும்.சமீபத்தில், கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் அதிகாரிகள், அணையில் நீரை திறந்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, அணையில் 140.4 அடிக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டது.

வரும் 20ம் தேதி, ரூல் கர்வ் விதிப்படி 141 அடியில் நீரை தேக்க, நீர்வளத் துறை திட்டமிட்டுள்ளது. அணையின் பலத்தை நிரூபிக்கும் வகையில், வரும் 30ம் தேதிக்கு பின் 142 அடி நீரை தேக்கி, அதன்பின் கிடைக்கும் உபரி நீரை வெளியேற்ற, நீர்வளத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் வாயிலாக, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி நீங்கும் என்று தமிழக அரசு கருதுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X