திருக்கார்த்திகைக்காக வித விதமாக மண் விளக்குகள் விற்பனை மும்முரம்

Added : நவ 15, 2021
Advertisement
மானாமதுரை : மானாமதுரையில் திருக்கார்த்திகைக்காக மண்ணால் செய்யப்பட்ட வித,விதமான விளக்குகள் விற்பனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.திருக்கார்த்திகை நாளன்று வீடுகள் மற்றும் கடைகள், கோயில்கள் ஆகியவற்றில் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு வழிபடுவது வழக்கம்.இதற்காகவே மானாமதுரையில் வருடந்தோறும் மண்ணால் ஆன விளக்குகளை தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி
 திருக்கார்த்திகைக்காக வித விதமாக மண் விளக்குகள் விற்பனை மும்முரம்

மானாமதுரை : மானாமதுரையில் திருக்கார்த்திகைக்காக மண்ணால் செய்யப்பட்ட வித,விதமான விளக்குகள் விற்பனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருக்கார்த்திகை நாளன்று வீடுகள் மற்றும் கடைகள், கோயில்கள் ஆகியவற்றில் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு வழிபடுவது வழக்கம்.இதற்காகவே மானாமதுரையில் வருடந்தோறும் மண்ணால் ஆன விளக்குகளை தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

வரும் 19 ந்தேதி நடைபெற உள்ள திருக்கார்த்திகை விழாவிற்காக மண்ணால் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள், சர விளக்குகள், அணையா விளக்கு, துளசி மாடம், பெரிய கம்ப்யூட்டர் விளக்கு, குருவாயூர் ஸ்டாண்ட், 5 முக குருவாயூர் விளக்கு, நட்டு விளக்கு, 2 அடுக்கு குருவாயூர் விளக்கு, 2,3 அடுக்கு தீப விளக்குகள், 1 அடுக்கு 7 சிட்டி மற்றும் 5 சிட்டி விளக்குகள்,அகல் விளக்குகள்,

தேங்காய் முக விளக்குகள், சாமி உருவ விளக்குகள் என பல்வேறு விதமான விளக்குகள் தயாரிக்கப்பட்டு தற்போது மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்திலும், தொழிலாளர்களின் வீடுகளிலும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X