பொது செய்தி

இந்தியா

'கிரிப்டோகரன்சி' பயன்பாடுதடை விதிக்க எதிர்ப்பு

Updated : நவ 17, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (5+ 2)
Share
Advertisement
புதுடில்லி :'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயம் தொடர்பாக நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இதில், தடை விதிப்பதற்கு பதிலாக, தீவிர கட்டுப்பாடுகள் விதிக்க பெரும்பாலான உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர். 'ஆன்லைன்'கிரிப்டோகரன்சி பயன்பாடு பல நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பணமில்லா பணம் எனப்படும் இது, 'ஆன்லைன்'
கிரிப்டோகரன்சி,தடை, எதிர்ப்பு

புதுடில்லி :'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயம் தொடர்பாக நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இதில், தடை விதிப்பதற்கு பதிலாக, தீவிர கட்டுப்பாடுகள் விதிக்க பெரும்பாலான உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.


'ஆன்லைன்'



கிரிப்டோகரன்சி பயன்பாடு பல நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பணமில்லா பணம் எனப்படும் இது, 'ஆன்லைன்' மூலமாக பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இந்த கிரிப்டோகரன்சி தொடர்பாக நம் நாட்டில் எந்த தடையும் இல்லை; பயன்படுத்துவது தொடர்பாக எந்த வழிகாட்டு விதிமுறைகளும் இல்லை.கிரிப்டோகரன்சியை பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக, ரிசர்வ் வங்கி, நிதித் துறை உயரதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

அப்போது, 'பயங்கரவாதத்துக்கு உதவும், பணமோசடிக்கு உதவும் என்பதால் இதை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது' என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.இந்த நிலையில் நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு, அதன் தலைவரான, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தலைமையில் நடந்தது.இதில், இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.கடும் கட்டுப்பாடு'கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்காமல், கடும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்' என, பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால் தடை விதிக்காமல் கட்டுப்பாடுகள் மட்டும் அமல் படுத்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (5+ 2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-நவ-202117:44:01 IST Report Abuse
Kasimani Baskaran ஒரு தகவல்: பிட்காயின் வெளியிட்ட பொழுது நூறு டாலருக்கு (ரூ 7400) முதலீடு செய்திருந்தால் இன்று உலகப்பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்று இருக்கலாம்.
Rate this:
Cancel
16-நவ-202117:18:52 IST Report Abuse
அப்புசாமி கிரிப்டோ கரன்சில பதுக்கி வைப்பதுதான் இப்போ ஃபேஷன். எந்த சுவிஸ் வங்கியிலும் கணக்கு வாணாம். அதுபாட்டுக்கு இணையத்தில் எங்கேயோ உங்க பேர்ல தொங்கிக்கிட்டிருக்கும். எவனாவது ஆட்டையப் போட்டாலும் திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி ஆயிடும். பேசாம இருக்க வேண்டியதுதான்.
Rate this:
Cancel
Ramanujan - Nagercoil,இந்தியா
16-நவ-202112:22:34 IST Report Abuse
Ramanujan இப்போது ஒரு நாட்டிற்கு ஒரு கரண்சிதான் இருக்கிறது . ஆனால் இப்போதே பல்லாயிரக்கான கிரிப்டோ கரண்சிகள் வந்து விட்டன. இன்னும் கோடிக்கணக்கான கரண்சிகள் வரக்கூடும். இது என்ன விளையாட்டு. வளர்ந்த நாட்டில் கூட உள்ள பைத்தியங்கள் உருவாக்கிய ஒன்றை வைத்து உலகம் பூராக விளையாட்டு காட்டுகிறார்கள். சீனா எடுத்த எடுப்பில் தடை செய்து விட்டார்கள். அவர்கள் வளர்ந்து விட்டார்கள். நாம் இன்னும் பிச்சைக்கார நாடு. இன்னும் அரசு யோசித்து கொண்டு இருக்கிறது. வெட்கக்கேடு.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
16-நவ-202114:14:12 IST Report Abuse
pradeesh parthasarathyபிஜேபி யின் ஊழல் பணம் அத்தனையும் இதிலே முதலீடு செய்துள்ளார்கள் .... பின்னர் எப்படி தடை பண்ணுவார்கள் ......
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-நவ-202117:38:36 IST Report Abuse
Kasimani Baskaran"பிஜேபி யின் ஊழல் பணம் அத்தனையும் இதிலே முதலீடு செய்துள்ளார்கள்" - அள்ளிவிட வேண்டியதுதானே... காசா பணமா......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X