கிரிப்டோகரன்சி பயன்பாடுதடை விதிக்க எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'கிரிப்டோகரன்சி' பயன்பாடுதடை விதிக்க எதிர்ப்பு

Updated : நவ 17, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி :'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயம் தொடர்பாக நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இதில், தடை விதிப்பதற்கு பதிலாக, தீவிர கட்டுப்பாடுகள் விதிக்க பெரும்பாலான உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர். 'ஆன்லைன்'கிரிப்டோகரன்சி பயன்பாடு பல நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பணமில்லா பணம் எனப்படும் இது, 'ஆன்லைன்'
கிரிப்டோகரன்சி,தடை, எதிர்ப்பு

புதுடில்லி :'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயம் தொடர்பாக நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இதில், தடை விதிப்பதற்கு பதிலாக, தீவிர கட்டுப்பாடுகள் விதிக்க பெரும்பாலான உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.


'ஆன்லைன்'



கிரிப்டோகரன்சி பயன்பாடு பல நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பணமில்லா பணம் எனப்படும் இது, 'ஆன்லைன்' மூலமாக பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இந்த கிரிப்டோகரன்சி தொடர்பாக நம் நாட்டில் எந்த தடையும் இல்லை; பயன்படுத்துவது தொடர்பாக எந்த வழிகாட்டு விதிமுறைகளும் இல்லை.கிரிப்டோகரன்சியை பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக, ரிசர்வ் வங்கி, நிதித் துறை உயரதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

அப்போது, 'பயங்கரவாதத்துக்கு உதவும், பணமோசடிக்கு உதவும் என்பதால் இதை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது' என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.இந்த நிலையில் நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு, அதன் தலைவரான, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தலைமையில் நடந்தது.இதில், இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.கடும் கட்டுப்பாடு'கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்காமல், கடும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்' என, பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால் தடை விதிக்காமல் கட்டுப்பாடுகள் மட்டும் அமல் படுத்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X