தமிழ்நாடு

தேசிய தர உறுதிச்சான்று சுகாதாரத்துறை குழு ஆய்வு

Added : நவ 15, 2021
Share
Advertisement
பூவந்தி : பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார துறையைச் சேர்ந்த டாக்டர்கள் குழு நேற்று ஆய்வு செய்தது.நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிசிச்சை அளிக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு தேசிய தர உறுதிச்சான்று வழங்கும். இதன் மூலம் மத்திய அரசின் நிதி உதவி, நேரடி சிகிச்சை ஆலோசனை உள்ளிட்டவை கிராமப்புற ஆரம்ப
 தேசிய தர உறுதிச்சான்று சுகாதாரத்துறை குழு ஆய்வு

பூவந்தி : பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார துறையைச் சேர்ந்த டாக்டர்கள் குழு நேற்று ஆய்வு செய்தது.

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிசிச்சை அளிக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு தேசிய தர உறுதிச்சான்று வழங்கும். இதன் மூலம் மத்திய அரசின் நிதி உதவி, நேரடி சிகிச்சை ஆலோசனை உள்ளிட்டவை கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கிடைக்கும்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதார துறையின் தேசிய தர உறுதி ஆய்வு குழு உறுப்பினர்கள் டாக்டர் அர்ச்சனா, டாக்டர் கமலேகர்பாட்டீயா ஆகியோர் ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு சிகிச்சை, மருத்துவமனை வளாக துாய்மை, அவசர சிகிச்சை, ரத்த பரிசோதனை, ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி. , நோயாளிகளின் பதிவேடுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்ததுடன் அது குறித்த விளக்கமும் கேட்டறிந்தனர்.

பல் மருத்துவ பிரிவு, எலும்பு முறிவு பிரிவு உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டு விளக்கம் கேட்டனர். தேசிய தர உறுதி குழுவினை சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ் வரவேற்றார். குழுவினரிடம் மருத்துவ அலுவலர் சேதுராமு, டாக்டர்கள் ஸ்ரீகாந்த், வரதீஸ்வரி உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.

பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2008ல் ஐ.எஸ்.ஓ., தரச்சான்று கிடைத்தது. கடந்த ஏப்ரலில் மாநில சுகாதார துறையும் ஆய்வு மேற்கொண்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X