பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் - கீழக்கரை 30 கோடி செலவிலான ரயில்வே மேம்பாலம்; ஆமை வேகத்தில் பணி

Added : நவ 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம்--கீழக்கரை ரோட்டில் ரூ.30 கோடி செலவிலான ரயில்வே மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம்-கீழக்கரை ரோட்டில் ரயில்வே கேட் மூடப்படும்போது பழைய பஸ் ஸ்டாண்ட் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தினமும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். கீழக்கரை,
ராமநாதபுரம் - கீழக்கரை 30 கோடி செலவிலான ரயில்வே மேம்பாலம்;  ஆமை வேகத்தில் பணி

ராமநாதபுரம் : ராமநாதபுரம்--கீழக்கரை ரோட்டில் ரூ.30 கோடி செலவிலான ரயில்வே மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.

அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம்-கீழக்கரை ரோட்டில் ரயில்வே கேட் மூடப்படும்போது பழைய பஸ் ஸ்டாண்ட் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தினமும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி பகுதிகளை சேர்ந்த மக்கள் சக்கரக்கோட்டை வழியாக ராமநாதபுரம் நகருக்கு எளிதாக வந்து செல்ல முடியும்.

தற்போது இ.சி.ஆர்., பாலம் வழியாக 6 கி.மீ., வரை சுற்றிவந்து சிரமப்படுகின்றனர். இதனையடுத்து ரூ.30 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு 2018ல் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.இப்பாலம் ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை வழியாக துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் கிழக்குகடற்கரை சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

தற்போது ரயில்வே கேட் அருகே மண்மேவி பாலப்பணி நடைபெறுகிறது. இந்த இடம் குறுகியதாக உள்ளதால் இருபுறத்திலும் வாகனங்கள் வரும்போது, நெரிசல் ஏற்பட்டு ராமநாதபுரம் -ராமேஸ்வரம் நெடுஞ்சாலை வரை போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து தனியார் திருமண மண்டபம், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பகுதி வரை பாலம் வருகிறது. இவ்விடத்தில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை செயல்படுத்துவதில்வருவாய் துறையினர் மந்தமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நிலத்தை விரைவில் கையகப்படுத்தி பாலப்பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X