சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் டிரைவர் வெட்டி கொலை; மாயமான மனைவிக்கு வலை

Added : நவ 15, 2021
Share
Advertisement
ஓசூர் : தளி அருகே, கார் டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். மாயமான அவரது மனைவியை, போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம்,தளி அடுத்த தேவகானப்பள்ளியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத், 33; கார் டிரைவர். இவரது மனைவி அனிதா, 28; இரு குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அச்சமயத்தில் அனிதா, போலீசாருக்கு போன் செய்வார். அப்போது, சமாதானம் செய்து வைக்க

ஓசூர் : தளி அருகே, கார் டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். மாயமான அவரது மனைவியை, போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,தளி அடுத்த தேவகானப்பள்ளியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத், 33; கார் டிரைவர். இவரது மனைவி அனிதா, 28; இரு குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அச்சமயத்தில் அனிதா, போலீசாருக்கு போன் செய்வார். அப்போது, சமாதானம் செய்து வைக்க அடிக்கடி வந்த போலீஸ்காரருக்கும், அனிதாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டிய மஞ்சுநாத், கடந்தாண்டு ஜூலை 21ல் தளி போலீஸ் ஸ்டேஷன் முன், லுங்கியில் துாக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இந்நிலையில், சானபோகனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நேற்று, மஞ்சுநாத் முகத்தில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்தார். தளி போலீசார் விசாரணையில், வேறு பகுதியில் கொலை செய்யப்பட்டு, இங்கு சடலத்தை வீசி சென்றது தெரிந்தது. மஞ்சுநாத் மனைவி அனிதா தலைமறைவாக உள்ளதால், அவருக்கும், கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை தேடி வருகின்றனர்.


கணவர் தற்கொலை


திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த கப்பலுாரைச் சேர்ந்தவர் துரைராஜ், 55; விவசாயி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார்.வளர்மதி, 45, என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் மாலை, வயலில் உள்ள கொட்டகையில் இருந்த வளர்மதிக்கும், துரைராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த துரைராஜ், விறகு கட்டையால் வளர்மதியின் தலையில் அடித்தார்.இதில், வளர்மதி மயங்கி விழுந்தார். துரைராஜ் அங்கிருந்து ஓடி விட்டார். வளர்மதி மகளுக்கு தகவல் தெரிந்து, தாயை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பரிசோதித்த டாக்டர்கள், வளர்மதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.கலசப்பாக்கம் போலீசார், துரைராஜை தேடி வந்த நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X