பொது செய்தி

தமிழ்நாடு

கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி அழகப்பா பல்கலை உறுப்புக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள்கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.டிச.,2020ல் அரசு கல்லூரிகளுக்கு அந்த அந்த பல்கலையில் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து ஜூன் வரை ஊதியம் வழங்கப்பட்ட நிலையில்,தற்போது ஆறு மாதமாக ஊதியம் வழங்க பல்கலை மறுத்து வருகிறது.மேலும் ஏப்.,
 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பரமக்குடி : பரமக்குடி அழகப்பா பல்கலை உறுப்புக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள்கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிச.,2020ல் அரசு கல்லூரிகளுக்கு அந்த அந்த பல்கலையில் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து ஜூன் வரை ஊதியம் வழங்கப்பட்ட நிலையில்,தற்போது ஆறு மாதமாக ஊதியம் வழங்க பல்கலை மறுத்து வருகிறது.மேலும் ஏப்., 2021 அரசணையின் படி அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் உயர்த்தி வழங்கவேண்டும். இ

துகுறித்து பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து கல்லூரி வளாகத்தில்கவுரவ விரிவுரையாளர்கள் கோஷம் எழுப்பி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விரிவுரையாளர்கள் சங்க மண்டல தலைவர்பூமி ராஜா, மாநில பொருளாளர் கோபாலகிருஷ்ணன், சங்க தலைவர் பாலமுருகன், செயலாளர் செந்தாமரை, பொருளாளர் அழகுராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X