எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ரத்தாகுமா?

Updated : நவ 16, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
'தமிழகத்தில் 2,௦௦௦த்துக்கும் மேற்பட்ட ரவுடிகளை வளைத்து பிடித்து, சிறையில் அடைத்தது தமிழக காவல் துறை. இது, மனித உரிமை மீறல். 'தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற, போலீசாரை வைத்து ஆட்சியாளர்கள் நடத்திய அராஜகம்' என, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய பார் அசோசியேஷன் அமைப்பின் தலைவர் நயினா
ஊரக உள்ளாட்சி தேர்தல், முடிவுகள் ரத்தாகுமா?


'தமிழகத்தில் 2,௦௦௦த்துக்கும் மேற்பட்ட ரவுடிகளை வளைத்து பிடித்து, சிறையில் அடைத்தது தமிழக காவல் துறை. இது, மனித உரிமை மீறல். 'தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற, போலீசாரை வைத்து ஆட்சியாளர்கள் நடத்திய அராஜகம்' என, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணைய பார் அசோசியேஷன் அமைப்பின் தலைவர் நயினா முகம்மது, இந்த புகார் மனுவை கொடுத்துள்ளார்.


பயத்தை ஏற்படுத்த முடிவுஇது குறித்து, இந்த அமைப்பின் செயலரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான அலெக்ஸ் சுதாகர் கூறியதாவது:செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், செப்., 6 மற்றும் 9ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில், முழு வெற்றி பெற வேண்டும் என தி.மு.க., அரசு திட்டமிட்டது. இதற்கு, அரசு அதிகாரிகளும், மாநில தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்துள்ளன.

தேர்தல் நடந்த ஒன்பது மாவட்டங்களிலும், எதிர்க்கட்சியினர் தேர்தல் வேலையில் ஈடுபடக்கூடாது என ஆளும் கட்சியினர் முடிவெடுத்தனர். எந்தெந்த பகுதியில், யாரெல்லாம் எதிர்க்கட்சியில் முக்கியமாக களப்பணியாற்றுவர் என்பது குறித்து கணக்கெடுத்தனர்.
அதோடு, எதிர்கட்சியினருக்கு கடைசி நேரத்தில் ஒரு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் முடிவு எடுத்தனர்.


கைது செய்யாதது ஏன்?அதற்காக, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், போலீசை ஏவி, 'ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம்' என்ற பெயரில், ரவுடிகள் வேட்டை நடத்துவதாக கூறி, திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றினர். இந்த நடவடிக்கை வாயிலாக, தமிழகம் முழுதும் 2,600 ரவுடிகள், ஆயுதங்களுடன் பிடிபட்டதாக கணக்கு காட்டி, பலரையும் சிறையில் அடைத்தனர். இத்தனை நாட்களும் இல்லாமல், எல்லா ரவுடிகளும் ஒரே நாளில் கத்தியை எடுத்துக் கொண்டு திரிந்தனரா? அவர்கள் ரவுடிகள், மோசமான குற்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்றால், அவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்?கைதானவர்களில் பெரும்பாலானோர் ரவுடிகளே கிடையாது. அவர்கள், ஆளும் கட்சிக்கு எதிராக தேர்தல் வேலை பார்க்க தயாரானவர்கள். அவர்களை குறிவைத்து, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விட்டனர்.
இந்த கைது நடவடிக்கையில் பெண்களும் தப்பவில்லை. இது, சட்டத்துக்கு விரோதமானது; மனித உரிமை மீறல். அரசியல் சட்டத்தையே சிதைக்கும் வகையில் நடந்து கொண்ட மாநில அரசு மீது, அரசியல் சட்டத்தின் 355 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உரிமை உண்டு.

தேசிய மனித உரிமைகள் ஆணையம், இது குறித்த புகார் மனுவை விசாரணைக்கு ஏற்று, மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி விசாரிக்க கூறியுள்ளது. விரைவில் ஆணையம் கள விசாரணை நடத்த உள்ளது.தேவையானால், சி.பி.ஐ., விசாரணைக்கும் பரிந்துரைக்கலாம். மொத்தத்தில், மனித உரிமைகள் ஆணைய விசாரணை, தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.குறிப்பாக, ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யவும், மனித உரிமைகள் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


‛எந்த விதிகளையும் பின்பற்றவில்லை'வழக்கறிஞர் அலெக்ஸ் சுதாகர் மேலும் கூறியதாவது:பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு படிவம் 20, 22, 23ன் படி தான் தேர்தல் நடத்த வேண்டும். எத்தனை வாக்காளர்கள் ஓட்டளித்தனர் என்ற விபரத்தை, படிவம் 20ல் குறிக்க வேண்டும். பதிவான ஓட்டு விபரங்களை படிவம் 22ல் பதிவு செய்ய வேண்டும்.

அனைத்து விபரங்களும் சரியாக இருந்தால் தான், படிவம் 23ன் படி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். ஆனால், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், பெரும்பாலான இடங்களில் படிவம் 20, 22 ஒத்துப்போகவே இல்லை. ஆனாலும், தேர்தல் முடிவுகளை அறிவித்தனர். தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றது போல, அதிகாரிகளை வைத்து அறிவித்து கொண்டனர். முறைகேட்டை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளனர். அந்த வழக்கும் விரைவில் விசாரணை வர உள்ளது. தேர்தல் செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.எந்த விதிகளையும் பின்பற்றாமல் தி.மு.க., அரசு, ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
16-நவ-202121:55:32 IST Report Abuse
S. Narayanan திரு. அண்ணாமலை மற்றும் பழனிசாமி இருவரும் திமுக அரசு ஆரம்பம் முதல் அராஜகம் செய்து தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றனர் என்று கூறிவருகிறார்கள். அதனால் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
Rate this:
S.Pandiarajan - tirupur,இந்தியா
19-நவ-202108:00:02 IST Report Abuse
S.Pandiarajanஆமாம் இருவரும் கொலைகாரர்கள் உண்மைத்தவிர வேறு ஏதுவும் பேசமாட்டார்கள்...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
16-நவ-202117:41:51 IST Report Abuse
RajanRajan சட்டம் ஒழுங்கு விடியலை தேடி திக்கு தெரியாத காட்டில் பயணிக்கிறதோ.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
16-நவ-202114:53:45 IST Report Abuse
raja அவனுவோ பத்து வருசமா காஞ்சி போயி veriyila இருக்கானுவோ ....உட்டீங்கன்னா ஒட்டு மொத்த தமிழகத்தையும் புறங்கையால் நக்கிடுவானுவோ....
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
18-நவ-202102:59:36 IST Report Abuse
Amal Anandanபத்து வருஷமா சுரண்டி தின்னவனுங்களும் அதை விட தயாராகவேயில்லை ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X