செய்தி செய்தி

தமிழ்நாடு

பள்ளி பருவத்தில் கவனம் சிதறக்கூடாது: மாணவர்களுக்கு டி.எஸ்.பி., அறிவுரை

Added : நவ 15, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மேற்கு, கிழக்கு போலீஸ் சிறுவர், சிறுமியர் மன மகிழ் மன்றம் (போலீஸ் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் கிளப்) சார்பில், குழந்தைகள் தினத்தையொட்டி போட்டிகள், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.மாணவர்களிடையே, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. அதில், கிளப்பை சேர்ந்த, 20 மாணவர்கள் பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, டி.எஸ்.பி., தமிழ்மணி



பொள்ளாச்சி: பொள்ளாச்சி மேற்கு, கிழக்கு போலீஸ் சிறுவர், சிறுமியர் மன மகிழ் மன்றம் (போலீஸ் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் கிளப்) சார்பில், குழந்தைகள் தினத்தையொட்டி போட்டிகள், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.மாணவர்களிடையே, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. அதில், கிளப்பை சேர்ந்த, 20 மாணவர்கள் பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, டி.எஸ்.பி., தமிழ்மணி பேசியதாவது:போலீஸ் சிறுவர், சிறுமியர் கிளப், குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினரின் குழந்தைகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல் வழங்கும் வகையில் செயல்படுகிறது. அவர்களின் திறன்களை மேம்படுத்த பாடப்புத்தகம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.சமூக விரோத செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலும், மாணவர்கள் நேரத்தை பயன்படுத்தி திறமைகள் மேம்படுத்த கிளப் வாயிலாக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.பள்ளி மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை மேம்பட படித்த படிப்பு தான் உதவியாக இருக்கும்.தற்போது, கொரோனா தொற்றுக்கு பின், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். கோவிட் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.மாணவர்களின் கல்வி மற்றும் திறமைகள் மேம்பட தேவையான உதவிகள், வழிகாட்டுதலையும் வழங்க தயாராக இருக்கிறோம். மேலும், 10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். மாணவர்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் உள்ளனர். எனவே, கவனத்தை திசை திருப்பாமல் படித்து நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவதுடன், வாழ்விலும் சாதனையாளராக வலம் வர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.போட்டித் தேர்வுகளுக்கு தேர்வு நிலைகள் மற்றும் தயாரிப்பு உத்திகள் குறித்து மாணவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இன்ஸ்பெக்டர்கள் ராம்தாஸ், ஆனந்தநாயகி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X