பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 53 லட்சம் மானியம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை ஒன்றியத்தில், தமிழ்நாடு நீர்ப்பாசன நவீன மேலாண்மை திட்டத்தில், ஆயிரம் விவசாயிகள் ஒன்றிணைத்து, அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை துவக்கி உள்ளனர். உலக வங்கியின் நிதி உதவியுடன், இந்த நிறுவனத்திற்கு, 53 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய விளை பொருட்களை மதிப்புக்கூட்டுதல், சந்தைப்படுத்துதல், இயந்திரம் வாங்கி வாடகைக்கு

மேட்டுப்பாளையம்:காரமடை ஒன்றியத்தில், தமிழ்நாடு நீர்ப்பாசன நவீன மேலாண்மை திட்டத்தில், ஆயிரம் விவசாயிகள் ஒன்றிணைத்து, அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை துவக்கி உள்ளனர். உலக வங்கியின் நிதி உதவியுடன், இந்த நிறுவனத்திற்கு, 53 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய விளை பொருட்களை மதிப்புக்கூட்டுதல், சந்தைப்படுத்துதல், இயந்திரம் வாங்கி வாடகைக்கு விடுதல், பஞ்சகாவியம், மண்புழு உரம், மீன் அமிலம் தயாரித்தல் உள்ளிட்டவற்றை இந்நிறுவனத்தினர் செய்து வருகின்றனர்.மானியம் தொகை முறையாக, விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதா என, தமிழக வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனரகத்தில் இருந்து, துணை இயக்குனர்கள் பூங்கோதை, சுந்தரவடிவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், காரமடையில் காய்கறி விற்பனை நிலையம், தேரம்பாளையத்தில் நாற்றுகள் உற்பத்திப்பண்ணை, ஆலாங்கொம்பில் உரம் விற்பனை நிலையம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X