பொது செய்தி

தமிழ்நாடு

டேங்கர் லாரிகளில் குடிநீர் விற்போருக்கு எச்சரிக்கை

Added : நவ 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம், நவ.16--டேங்கர் லாரிகளில் குடிநீர் விற்பனை செய்வோர் கண்டிப்பாக குளோரினேசன் செய்து விற்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும், என சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர்குமரகுருபரன் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் காரங்காடு அருகே முள்ளிமுனை கிராமத்தில் மூவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம், நவ.16--

டேங்கர் லாரிகளில் குடிநீர் விற்பனை செய்வோர் கண்டிப்பாக குளோரினேசன் செய்து விற்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும், என சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர்குமரகுருபரன் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் காரங்காடு அருகே முள்ளிமுனை கிராமத்தில் மூவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நவ.12ல் கீழக்கரையில் சென்னையில் இருந்து ஊருக்கு வந்த கணவன், மனைவிக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து அபேட் கொசுமருந்து தெளித்தல், புகை மருந்து தெளித்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.வீடுகளில் தரைநிலை தொட்டிகளில் அடிக்கடி பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். சுற்றுப்புறங்களில் தண்ணீர்தேங்காமல் பார்க்க வேண்டும். டயர், தேங்காய் ஓடு, பானை ஓடு, உரல்களில் தண்ணீர் தேங்காமல் வைக்க வேண்டும்.மேலும், டிராக்டர், லாரிகளில் டேங்கரில்குடிநீர் விற்பனை செய்வோர் கண்டிப்பாக குளோரினேசன் செய்த குடிநீரை மட்டுமே வினியோகிக்க வேண்டும். குளோரினேசன் செய்யாமல் குடிநீர் வினியோகிப்பது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X