சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு குடோன் வெடித்து தரைமட்டம்; இடிபாடுகளில் சிக்கிய நால்வர் கதி என்ன?

Added : நவ 15, 2021
Share
Advertisement
சிவகாசி : சிவகாசியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில், வீடுடன் கூடிய கட்டடம் தரைமட்டமானது; இருவர் காயமடைந்தனர். இடிபாடுகளில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தால், ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணி நடக்கிறது.விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி காலனியில், மதுரை, கோரிப்பாளையத்தைச் சேர்ந்த ராமநாதன், 44, என்பவருக்கு
 பட்டாசு குடோன் வெடித்து தரைமட்டம்; இடிபாடுகளில் சிக்கிய நால்வர் கதி என்ன?

சிவகாசி : சிவகாசியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில், வீடுடன் கூடிய கட்டடம் தரைமட்டமானது; இருவர் காயமடைந்தனர். இடிபாடுகளில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தால், ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணி நடக்கிறது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி காலனியில், மதுரை, கோரிப்பாளையத்தைச் சேர்ந்த ராமநாதன், 44, என்பவருக்கு சொந்தமான பட்டாசு பேப்பர் குழாய் தயாரிக்கும் கம்பெனி, குடோன், வீடு என அனைத்தும் ஒரே கட்டடத்தில் உள்ளது. இரண்டு மாடி கட்டடத்தில், தரை தளம் குடோன், பேப்பர் குழாய் தயாரிக்கும் இடமாகவும், மாடியில் வீடும் இருந்தது. குடோனில் அனுமதியின்றி பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று பேப்பர் குழாய் தயாரிக்கும் பணி நடந்தது. நான்கு பேர் வேலை செய்தனர். குடோனில் அதிகளவு பட்டாசுகள் வைத்திருந்த நிலையில், உராய்வு காரணமாக மதியம் 3:45 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு வேலை பார்த்த வேல்முருகன், 37; மனோஜ்குமார், 23, காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தகவல்படி, கட்டடத்தின் உள்ளே ஹமீதா, 55; கார்த்தீஸ்வரி, 33, சிக்கியிருப்பது தெரிந்தது.

அதேபோல் கட்டட உரிமையாளர் ராமநாதன், அவரது மனைவி பஞ்சவர்ணம் கதி குறித்தும் தெரியவில்லை. நான்கு ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடக்கும் நிலையில், இடிபாடுகளை முழுமையாக அகற்றிய பின்பே, அவர்கள் நிலை தெரியவரும். தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

விபத்து நடந்தபோது அத்தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. அருகில் மூன்று சர்ச்கள்,50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 50 மீட்டர் துாரத்தில் தனியார், அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றுக்கு பாதிப்பில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X