அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ.,வில் 21ல் விருப்ப மனு

Added : நவ 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து, தமிழக பா.ஜ., சார்பில், 21ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. பா.ஜ., சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து, இம்மாதம் 7ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று
 தமிழக பா.ஜ.,வில்  21ல் விருப்ப மனு

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து, தமிழக பா.ஜ., சார்பில், 21ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. பா.ஜ., சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து, இம்மாதம் 7ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில், 6ம் தேதி முதல் கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதனால், விருப்ப மனு பெறும் பணி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 21ம் தேதி காலை, மாநகராட்சிகளில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட இருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரிடம், அண்ணாமலையும், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமியும், 21ம் தேதி காலை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மனுக்களை பெற உள்ளனர்.

இதேபோல, மற்ற மாநகராட்சிகளில் மூத்த நிர்வாகிகள், 26ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெற உள்ளனர். விருப்ப மனுக்கள் பெறும் பொறுப்பாளர்களின் பட்டியலையும் பா.ஜ., வெளியிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
16-நவ-202112:22:10 IST Report Abuse
Samathuvan எல்லாரும் விரும்பும் ஜீ ன்னு சொல்லிப்புட்டு இப்படி விருப்ப மனு கேட்குறது தப்பா தெரியலேயா. ஆனா இந்த ஜீ த்தான் எல்லோரரையும் புடிக்கமாட்டேங்குது. இது நல்லவா இருக்கு. ஹும் அம்புட்டுதான். கொஞ்சம் தியானம் பண்ணும் போது யோசிங்க.
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
16-நவ-202110:32:52 IST Report Abuse
RandharGuy ஒரு வோட்டு வாங்க இவளவு முஸ்தீபு....கோட் ஆன் தி போட்...முதல்ல இவங்குலே ஆட்டத்துல சேததுக்க யாரும் இல்லய்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X