பொது செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1.78 லட்சம் திருட்டு

Added : நவ 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நிதி நிறுவன ஊழியர் டூவீலரில் வைத்திருந்த 1 லட்சத்து 78 ஆயிரத்து 630 ரூபாயை திருடிச்சென்ற மூன்று வாலிபர்களை போலீசார் தேடுகின்றனர்.மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த திருஞானம் மகன் ரஞ்சித்குமார் 25. மூன்றாண்டுகளாக ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்சில் கடன் வசூல் செய்யும் களப் பணியாளராக வேலை செய்து வருகிறார்.நேற்று

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நிதி நிறுவன ஊழியர் டூவீலரில் வைத்திருந்த 1 லட்சத்து 78 ஆயிரத்து 630 ரூபாயை திருடிச்சென்ற மூன்று வாலிபர்களை போலீசார் தேடுகின்றனர்.

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த திருஞானம் மகன் ரஞ்சித்குமார் 25. மூன்றாண்டுகளாக ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்சில் கடன் வசூல் செய்யும் களப் பணியாளராக வேலை செய்து வருகிறார்.நேற்று காலை 9:00 மணிக்கு ராமநாதபுரம் மதுரை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் ராஜேஸ்வரன் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 630 வசூல் செய்தார்.

அந்த பணத்துடன் டூவீலரில் வந்தவர் சர்ச் அருகே வாடிக்கையாளர்கள் இருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது பணப்பையை டூவீலர் சீட்டில்வைத்திருந்தார். பணத்துடன் வந்ததை தெரிந்து கொண்ட மூன்று வாலிபர்கள் ஒரு டூவீலரில் அவரை பின் தொடர்ந்து வந்தனர். ஒருவன் இறங்கி திடீரென பணப்பையை எடுத்துக்கொண்டு மூவரும்டூவீலரில் தப்பிச்சென்றனர். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X