சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
- நிருபர் குழு -கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால், பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை ஆர்.எஸ்.புரத்திலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின், பாலியல் தொல்லையால், கோட்டைமேடு பகுதியை சேர்ந்த, 17 வயது மாணவி, தற்கொலை செய்து கொண்டார்.மாநிலம் முழுவதும் கடும் அதிர்வுகளை

- நிருபர் குழு -

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால், பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை ஆர்.எஸ்.புரத்திலுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின், பாலியல் தொல்லையால், கோட்டைமேடு பகுதியை சேர்ந்த, 17 வயது மாணவி, தற்கொலை செய்து கொண்டார்.மாநிலம் முழுவதும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொள்ளாச்சியில் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் இணைந்து, மாணவிக்கு நேர்த்த பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க தவறிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விசாகா கமிட்டி அமைக்கவும், சமூக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கவும், இச்சம்பவத்தில் மகளிர் ஆணையம் தலையிடவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.உடுமலைஉடுமலை அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியர், நேற்று வகுப்புகளைப் புறக்கணித்தனர். கல்லுாரி வளாகத்தின் நுழைவுவாயிலில் அமர்ந்து, மாணவி தற்கொலைக்கு காரணமாக இருந்த ஆசிரியரை துாக்கிலிட வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X