சோளப்பயிரை சுவைத்த யானைகள்: விவசாயிகள் சிரமம்: பயிர் விளைவிப்பதில் விவசாயிகள் சிரமம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:கோவை புறநகர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், முழுமையாக காட்டு யானைகளை கட்டுப்படுத்த இயலவில்லை.நேற்று முன்தினம் இரவு, துடியலுார் அருகே பன்னிமடையில் இருந்து

பெ.நா.பாளையம்:கோவை புறநகர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், முழுமையாக காட்டு யானைகளை கட்டுப்படுத்த இயலவில்லை.நேற்று முன்தினம் இரவு, துடியலுார் அருகே பன்னிமடையில் இருந்து தாளியூர் செல்லும் வழியில் உள்ள ராஜகோபால் தோட்டத்துக்குள் மூன்று யானைகள் புகுந்தன. அவை நன்கு விளைந்திருந்த சோளப் பயிர்களை மிதித்து சேதப்படுத்தியதோடு, சுவைத்தும் சென்றன. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், விடிய, விடிய அதே பகுதியில் சுற்றிய யானைகள், அதிகாலை மலையடிவாரம் திரும்பின.விவசாயிகள் கூறுகையில்,'காட்டு யானைகளால் தென்னை, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை விளைவிப்பதில் பெருத்த சிரமம் உள்ளது. யானைகளால் ஏற்படும் நஷ்டத்திற்கு வனத்துறை மற்றும் விவசாயத் துறை சார்பில் வழங்கப்படும் நஷ்ட ஈடு தொகை குறைவாக உள்ளது. அதை அதிகப்படுத்தி தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X