சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

Added : நவ 15, 2021
Share
Advertisement
வால்பாறை: வால்பாறையில், யானைகள் நடமாடும் பகுதியில், தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்க கூடாது, என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.வால்பாறையில் பருவமழைக்கு பின், வனவளம் செழிப்பாக உள்ளது. இதனால் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.குறிப்பாக, வில்லோனி, லோயர் பாரளை, அக்காமலை, ேஷக்கல்முடி, தாய்முடி, சின்கோனா, அக்காமலை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் தனித்தனி கூட்டமாக

வால்பாறை: வால்பாறையில், யானைகள் நடமாடும் பகுதியில், தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்க கூடாது, என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.வால்பாறையில் பருவமழைக்கு பின், வனவளம் செழிப்பாக உள்ளது. இதனால் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.குறிப்பாக, வில்லோனி, லோயர் பாரளை, அக்காமலை, ேஷக்கல்முடி, தாய்முடி, சின்கோனா, அக்காமலை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.யானைகள் நடமாட்டம் குறித்து, பொதுமக்களுக்கு இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நாள் தோறும், மொபைல்போன் வாயிலாக குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது.இந்நிலையில், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகள், சில நேரங்களில் வீடுகளை சேதப்படுத்தி, ரேஷன் கடையை உடைத்து அரிசியை சேதப்படுத்துகின்றன.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். யானைகள் தேயிலை காட்டில் முகாமிட்டால், அந்த பகுதியில் தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகம் அனுமதிக்க கூடாது.இரவு நேரங்களில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகளை துன்புறுத்தக்கூடாது. யானைகள் முகாமிட்டால், உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X