செய்தி செய்தி

தமிழ்நாடு

அமராவதி பாசன பகுதிகளில் நெல் நடவு தீவிரம்: விதை உற்பத்திக்கு பதிவு செய்ய அழைப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
உடுமலை: அமராவதி பாசனத்தில் சம்பா பருவ நெல் நடவு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விதைப்பண்ணை பதிவு செய்ய விதைச்சான்றுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் பகுதிகளில், அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது நடவுப்பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நெல் விதை



உடுமலை: அமராவதி பாசனத்தில் சம்பா பருவ நெல் நடவு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விதைப்பண்ணை பதிவு செய்ய விதைச்சான்றுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் பகுதிகளில், அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது நடவுப்பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நெல் விதை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் விதைப்பண்ணைகளை பதிவு செய்து கொள்ளலாம்.விதைப்பண்ணை அமைக்க விருப்பும் விவசாயிகள், ஆதாரநிலையில், 4 அடிக்கு ஒரு அடி பட்டம் விட்டும், சான்று நிலை பண்ணைகளுக்கு, 8 அடிக்கு ஒரு பட்டம் விட்டும் நடவுப்பணி மேற்கொள்ள வேண்டும்.இதனால், கலவன்கள் அகற்றும் பணி, உரம் இடுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள எளிதாக இருக்கும். ஆனால், வரிசை நடவுக்கும், நேரடி விதைப்பிற்கும் பட்டம் விட தேவையில்லை.மேலும், சான்று விதைகள் உற்பத்தி செய்ய விரும்புபவர்கள், விதைப்பண்ணை அமைக்கப்பட்ட வயல்களின் விதை ஆதாரம், விதைப்பண்ணை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களுடன், திருப்பூர் விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.விதைப்பு அறிக்கை பதிவு செய்யும் போது, விதை ஆதார அட்டைகள், விற்பனை ரசீது இணைக்கவும், பதிவு செய்யப்பட்ட நெல் ரகங்களாகவும் இருக்க வேண்டும். வெளி மாநில நெல் ரகங்களாக இருந்தால், படிவம்-2 அவசியமாகும்.மேலும், விதைத்த 25 நாட்களுக்குள்ளாகவோ, பூப்புக்கு, 15 நாட்களுக்கு முன்பாகவோ, விதைப்பு அறிக்கையில் அனைத்து தகவல்களும் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்யப்பட்ட விதைப்பு அறிக்கைக்கு, பதிவு எண் வழங்கப்பட்டு, உரிய விதைச்சான்று அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.வயல்கள்,, 50 மீட்டர் இடைவெளிக்கு மேல் இருந்தாலும், வெவ்வேறு ரகம், நிலை, விதைப்பு அல்லது நடவு தேதியில், 7 நாட்களுக்கு மேல் வித்தியாசம் இருந்தாலும், தனித்தனி வயல்களாக விதைப்பு அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.விதைப்பு அறிக்கை பதிவு கட்டணம் , ஏக்கருக்கு 25 ரூபாயும், வயலாய்வு கட்டணமாக, ஏக்கருக்கு, ரூ.60 மற்றும் பகுப்பாய்வு கட்டணமாக குவியலுக்கு, ரூ.30 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் உடனடியாக பதிவு செய்து, நல்ல முளைப்புத்திறன், சீரான வளர்ச்சி, அதிக மகசூல் தரக்கூடிய தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், என விதைச்சான்றுத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X