செய்தி செய்தி

தமிழ்நாடு

பொது இடத்தில் விளம்பரமா! புகார் தெரிவிக்க வேண்டுகோள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி, சாலையோரங்களிலும், பொது இடங்களிலும், விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதியில்லை.தடையை மீறி வைத்திருந்தால், உள்ளாட்சி அமைப்பினர் அகற்ற வேண்டும் என்று, தலைமை செயலாளரும் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான

பொள்ளாச்சி: உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி, சாலையோரங்களிலும், பொது இடங்களிலும், விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதியில்லை.தடையை மீறி வைத்திருந்தால், உள்ளாட்சி அமைப்பினர் அகற்ற வேண்டும் என்று, தலைமை செயலாளரும் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சாலைகள், நடைபாதைகளில் வைக்கப்பட்டிருந்த 5,687 விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.விளம்பர பலகை அகற்றப்படாமல் இருந்தால், அது பற்றிய தகவலை 94875 70159 என்ற எண்ணுக்கு மக்கள் தகவல் அனுப்பலாம். விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் முகவரி, கூகுள் லொகேஷன், படங்களுடன் புகார் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர், நெடுஞ்சாலைத்துறையினரால் விளம்பர பலகைகள் அகற்றப்படும். விளம்பர பலகை வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும், என, கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X