பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள் 

Added : நவ 15, 2021
Share
Advertisement
பாரில் தகராறு செய்தவர் கைதுகாளையார்கோவில்: காளையார்கோவிலை சேர்ந்தவர் விஜயபாண்டி 44. இவர் இருப்பன் பூச்சி என்ற இடத்தில் உள்ள மதுபான கடை அருகே பார் நடத்தி வருகிறார். சிறியூரை சேர்ந்த செல்லப்பாண்டி 38,அங்கு சென்று இலவசமாக மது பாட்டில் கேட்டுள்ளார். தர மறுக்கவே கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். அவரை மிரட்டி ரூ.1,200 பறிமுதல் செய்து தப்பினார். இன்ஸ்பெக்டர்

பாரில் தகராறு செய்தவர் கைது

காளையார்கோவில்: காளையார்கோவிலை சேர்ந்தவர் விஜயபாண்டி 44. இவர் இருப்பன் பூச்சி என்ற இடத்தில் உள்ள மதுபான கடை அருகே பார் நடத்தி வருகிறார். சிறியூரை சேர்ந்த செல்லப்பாண்டி 38,அங்கு சென்று இலவசமாக மது பாட்டில் கேட்டுள்ளார்.

தர மறுக்கவே கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். அவரை மிரட்டி ரூ.1,200 பறிமுதல் செய்து தப்பினார்.

இன்ஸ்பெக்டர் பாண்டி, செல்லப்பாண்டியை கைது செய்து சிவகங்கை சிறையில் அடைத்தார்.
பங்கில் எரிந்த கார்: 3 பேர் மீது வழக்குதேவகோட்டை: தேவகோட்டை அருகே உஞ்சனை பாண்டியன் 42. இவர் தனது காரில் பேரனுடன் நவ.,14 அன்று காலை 10:45 மணிக்கு தேவகோட்டை தியேட்டர் எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றார்.

இவரது காருக்கு பெட்ரோல் போடும் பணியில் ஈடுபட்ட தேவகோட்டை முருகேசன் மனைவி ஜெயராணி 43, காரில் பெட்ரோலுக்கு பதில் டீசலை பிடித்துள்ளார். அவற்றை அகற்றுமாறு பாண்டியன் கேட்டதால், பங்க் மேலாளர் ரவிச்சந்திரன் 47, மெக்கானிக் செல்வம் 34, கார் டேங்கில் இருந்து டீசலை எடுக்கும் போது கார் தீப்பற்றி எரிந்தது.

எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் பெட்ரோல் பங்க் மேலாளர், மெக்கானிக், ஊழியர் மீது வழக்கு பதிந்தார்.

கண்மாய் மடை பிரச்னை20 பேர் மீது வழக்கு

சிவகங்கை: சிவகங்கை அருகே பில்லுாரில் பொதுப்பணித்துறை கண்மாயில் தேங்கிய தண்ணீரை மதகு வழியாக வேறு பகுதிக்கு செல்ல விடாமல் அக்கிராமத்தினர் மணல் மூடைகளை வைத்து அடைத்தனர்.

இதை அறிந்து பொதுப்பணித்துறையினர் மூடைகளை அகற்றினர். இதை கண்டித்து நவ.,13 அன்று இரவு 7:00 மணிக்கு பில்லுாரை சேர்ந்த காட்டுராஜா மகன் சரவணன் 30, மகாலிங்கம் மகன் காளீஸ்வரன் 25, அழகர் மகன் நாகமுத்து 40, சுப்பு மகன் கருணாகரன் 47, கண்ணன் 38 உட்பட 20 க்கும் மேற்பட்டவர்கள் மதுரை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., ஸ்ரீதர் பில்லுாரை சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிந்தார். எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் பலிசாலைக்கிராமம்: சாலைக்கிராமம் ராஜாமுகமுது மனைவி ஜெயின் அரபு நிஷா. கடந்த 12 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. 11 வயதில் பெண் குழந்தை உள்ளது.

அவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் 2 வது திருமணம் முடித்தார். நவ.,8 ம் தேதி நடந்த விபத்தில் இவரது 11 வயது பெண் குழந்தை இறந்தார். மன அதிருப்தியில் இருந்த பெண் நவ.,9ம் தேதி இரவு 11:00 மணிக்கு வீட்டில் எலிபேஸ்ட் சாப்பிட்டார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

போலீசார் விசாரிக்கின்றனர்.மாணவர் தற்கொலைகுன்றக்குடி: தேனி மாவட்டம் பி.அம்மாபட்டியை சேர்ந்த முருகன் மகன் திருக்குமரன் 20. இவர் காரைக்குடி அருகே கோவிலுாரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கல்லுாரியில் படிக்கிறார்.

தந்தை இறப்பிற்கு பின் தாய் ஷீலாதேவி உழைப்பால் இவர் படித்து வருகிறார். படிப்பிற்கு பலரிடம் நிதி உதவி கேட்டுள்ளார். கிடைக்காத அதிருப்தியில் நேற்று முன்தினம் கல்லுாரி விடுதியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தார். குன்றக்குடி இன்ஸ்பெக்டர் தேவகி விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X