அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: மத்தம்பாளையம் மற்றும் சாமி செட்டிபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் 'ரவுண்ட் டேபிள்' அமைப்புகளின் சார்பில், புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜைகள் நடந்தன.மத்தம்பாளையத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கோவை ரவுண்ட் டேபிள், 9 சார்பில், 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம்

பெ.நா.பாளையம்: மத்தம்பாளையம் மற்றும் சாமி செட்டிபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் 'ரவுண்ட் டேபிள்' அமைப்புகளின் சார்பில், புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜைகள் நடந்தன.மத்தம்பாளையத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கோவை ரவுண்ட் டேபிள், 9 சார்பில், 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்படுகிறது. ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவர் பிரேம் ஆனந்த், வட்டார தலைவர்கள் விஷ்ணு, பிரியங்கா ஆகியோர் தலைமை வகித்து, பணிகளை துவக்கி வைத்தனர்.லேடிஸ் சர்க்கிள், 9 அமைப்பின் சார்பில் பள்ளிக்கு, 5 எவர்சில்வர் தண்ணீர் டிரம்களை தலைவி சரண்யா, திட்ட ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியை தீபாவிடம் வழங்கினர். சாமி செட்டிபாளையத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கோவை அக்னி ரவுண்ட் டேபிள், 133 சார்பில், 16 லட்ச ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகளை கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.தலைமை ஆசிரியர் விக்டர், கோவை அக்னி ரவுண்ட் டேபிள் அமைப்பின் வட்டார தலைவர் விஷ்ணு பிரபாகர், திட்ட ஒருங்கிணைப்பாளர் முகுந்தன் முன்னிலையில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார உதவி கல்வி அலுவலர் ஸ்ரீ சுதா, ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவர் பிரவீன்ராஜ் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X