துளிகள் செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி வருது தடுப்பூசி பயன்பெற அழைப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
அன்னுார்: வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டம் இன்று அ.மேட்டுப்பாளையம் ஊராட்சியில் நடக்கிறது.அன்னுார் ஒன்றியத்தில் வீடுதேடி தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 8ம் தேதி பொகலுார் ஊராட்சியில் துவக்கப்பட்டது. பொகலுார், மூக்கனுார், செம்மாணி செட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அன்னுார் அரசு மருத்துவமனையில் தினமும் தடுப்பூசி

அன்னுார்: வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டம் இன்று அ.மேட்டுப்பாளையம் ஊராட்சியில் நடக்கிறது.அன்னுார் ஒன்றியத்தில் வீடுதேடி தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 8ம் தேதி பொகலுார் ஊராட்சியில் துவக்கப்பட்டது. பொகலுார், மூக்கனுார், செம்மாணி செட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அன்னுார் அரசு மருத்துவமனையில் தினமும் தடுப்பூசி போடப்படுகிறது.இத்துடன், முக்கிய இடங்களில் மூன்று நடமாடும் ஆம்புலன்ஸ்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இன்று அ.மேட்டுப்பாளையம் ஊராட்சியிலும், 17ம் தேதி பசூர் ஊராட்சியிலும், 18ம் தேதி வடக்கலுார் ஊராட்சியிலும், 19ம் தேதி குன்னத்துார் ஊராட்சியிலும் முகாம் நடக்கிறது. பொதுமக்கள் தங்கள் ஊராட்சிக்கு நடமாடும் தடுப்பூசி வாகனம் வரும் போது, அதைப் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X