தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டத்திற்கு 5,005 டன் யூரியா உரம் ஒதுக்கீடு; அக்கரை காட்டாத அதிகாரிகள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட விவசாய தேவைக்கு மத்திய அரசு 5,005 டன் யூரியா உரம் ஒதுக்கியும் உரிய காலத்திற்குள் பெற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இயல்பை விட வடகிழக்கு பருவ மழை அதிகமாக பெய்துள்ளது. ஆறு, பாசன கண்மாய்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 2.20 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட விவசாய தேவைக்கு மத்திய அரசு 5,005 டன் யூரியா உரம் ஒதுக்கியும் உரிய காலத்திற்குள் பெற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் இயல்பை விட வடகிழக்கு பருவ மழை அதிகமாக பெய்துள்ளது. ஆறு, பாசன கண்மாய்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 2.20 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். தற்போது அதிக வெயில், மழையின்றி மேக மூட்டமாக காணப்படுவதால் நெல்லில் பால் பிடித்து பயிர்கள் வளர வாய்ப்பு அதிகம் உண்டு.பயிர் விளைச்சலுக்கு பெரும்பாலான விவசாயிகள் யூரியா உரத்தை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சில தனியார் உரக்கடைகளில் உர மூடைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.அதே நேரம் மாவட்டத்திலுள்ள 126 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உர மூடைகள் இருப்பு இல்லை என தெரிவிக்கின்றனர்.

அரசு அதிகாரிகள் விவசாயிகள் மீது ஏனோ கருணை காட்ட தவறி விட்டனர்.மத்திய அரசின் உரத்துறை சார்பில் பருவ மழை காலங்களுக்கு மட்டுமே ஒரு போக சாகுபடி எடுக்க தேவையான 5,005 டன் யூரியா மூடைகளை சிவகங்கைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றை வாங்கி விவசாயிகளுக்கு வினியோகம் செய்யவேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதால் நேற்று வரை இம்மாவட்டத்திற்கு 2,036 டன் யூரியா உரம் மட்டுமே வந்துள்ளது.

இன்னும் இம்மாவட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 2,969 டன் யூரியா உர மூடைகளை விரைந்து பெற்று தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன்தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் ஏக்கர் வரை திருப்புவனம், மானாமதுரைப்பகுதியில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நவ., மாதத்திற்கு சிவகங்கை மாவட்டத்திற்கு 4956 மெ.டன் உரம் தேவைப்படுகிறது. 2300 மெ.டன் வரப்பெற்று விற்பனை செய்யப்படுகிறது.காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நமக்கு ஆயிரம் மெ.டன் வரை இரு தினங்களில்கிடைக்க வாய்ப்புள்ளது. உரத்தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளுக்கு வழங்க அனைத்துநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X