முன்னேற்றம் தந்த பேச்சுவார்த்தை: விசைத்தறியாளர்கள் நம்பிக்கை| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

முன்னேற்றம் தந்த பேச்சுவார்த்தை: விசைத்தறியாளர்கள் நம்பிக்கை

Added : நவ 15, 2021
Share
சோமனுார்: விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விசைத்தறியாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள், கடந்த சில ஆண்டுகளாக, புதிய கூலி உயர்வு கோரி வந்தனர். கடந்த ஜூன் மாதம் முதல், பல கட்ட பேச்சுவார்த்தைகள், இரு மாவட்ட தொழிலாளர் நல அலுவலகங்களில் நடந்தன. அவற்றில் ஜவுளி


சோமனுார்: விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விசைத்தறியாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள், கடந்த சில ஆண்டுகளாக, புதிய கூலி உயர்வு கோரி வந்தனர். கடந்த ஜூன் மாதம் முதல், பல கட்ட பேச்சுவார்த்தைகள், இரு மாவட்ட தொழிலாளர் நல அலுவலகங்களில் நடந்தன. அவற்றில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காமல் இருந்து வந்ததால், பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.இதனால், விசைத்தறியாளர்கள், வேலை நிறுத்தம் செய்யும் முடிவில் இருந்தனர். இந்நிலையில், கோவை தொழிலாளர் நல அலுவலக இணை கமிஷனர் லீலாவதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், துணை கமிஷனர்கள் பிரேமா(கோவை), செந்தில்குமரன்( திருப்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் சோமனுார் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் சிலரும், பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், ஒரு வாரத்தில் மற்ற உற்பத்தியாளர்களுடன் கலந்து பேசி கூலி உயர்வு சதவீதம் குறித்து தெரிவிப்பதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் அவிநாசி, திருப்பூர் பகுதியை சேர்ந்த ஜவுளி உறப்த்தியாளர்கள் பங்கேற்கவில்லை. பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விசைத்தறியாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X