துளிகள் செய்தி

தமிழ்நாடு

தடுப்பணையில் முதலை நடமாட்டம்!

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: பிரஸ்காலனி, சிவா நகர் தடுப்பணையில் முதலை நடமாட்டம் இருப்பதால், பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகரை அடுத்து எம்.ஜி.ஆர்., நகர் அருகே சிவா நகர் தடுப்பணை உள்ளது. கடந்த சில நாட்களாக, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பெய்த மழையை அடுத்து தடுப்பணை

பெ.நா.பாளையம்: பிரஸ்காலனி, சிவா நகர் தடுப்பணையில் முதலை நடமாட்டம் இருப்பதால், பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகரை அடுத்து எம்.ஜி.ஆர்., நகர் அருகே சிவா நகர் தடுப்பணை உள்ளது. கடந்த சில நாட்களாக, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பெய்த மழையை அடுத்து தடுப்பணை நிறைந்து வழிந்தது. இந்நிலையில், இத்தடுப்பணையில் முதலை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதுகுறித்து, வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயராமன், பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் முதலையை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கூறுகையில்,'சில நாட்களுக்கு முன்பு மத்தம்பாளையம், கோட்டை பிரிவு அருகே உள்ள பள்ளத்தில் முதலை இருப்பது தெரிந்தது. சமீபத்தில் பெய்த மழையால், பெருகிய வெள்ள நீரில், அங்கிருந்து முதலை எதிர்பக்கமாக நீந்தி, சிவா நகர் தடுப்பணையை அடைந்திருக்கலாம். தடுப்பணையை சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடை மேய்ப்பவர் உள்ளிட்டோரின் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே, தடுப்பணை பக்கம் நடமாடும் நபர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், முதலை நடமாட்டம் உள்ளது என்ற அறிவிப்பு பலகை இப்பகுதியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X