பொது செய்தி

தமிழ்நாடு

45 ஆண்டுகளாக பட்டா கிடைக்கல : அமைச்சரிடம் மக்கள் மனு

Added : நவ 15, 2021
Share
Advertisement
சோமனுா:கடந்த, 45 ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் அவதிப்படுவதாக செந்தில் நகர் மக்கள், மின்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.சோமனுார் அடுத்த செந்தில் நகர், கணேசபுரம், கிருஷ்ணாபுரம் மக்கள், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அளித்த மனு:சூலுார் தாலுகாவுக்கு உட்பட்ட செந்தில் நகர், கணேசபுரம், கிருஷ்ணாபுரம் பகுதிகளில், ஏராளமானோர், 45 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம்.

சோமனுா:கடந்த, 45 ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் அவதிப்படுவதாக செந்தில் நகர் மக்கள், மின்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.சோமனுார் அடுத்த செந்தில் நகர், கணேசபுரம், கிருஷ்ணாபுரம் மக்கள், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அளித்த மனு:சூலுார் தாலுகாவுக்கு உட்பட்ட செந்தில் நகர், கணேசபுரம், கிருஷ்ணாபுரம் பகுதிகளில், ஏராளமானோர், 45 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். இங்கு, மூன்று, நான்கு முறை பத்திர பரிவர்த்தனை நடந்து, நில உரிமைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கான வரிகள், குடிநீர் மற்றும் மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். வங்கிகளில் கடனும் பெற்றுள்ளோம்.மேற்கண்ட இடங்கள் ரயில்வே துறையால் கைவிடப்பட்டவை. கடந்த, 2000ம் ஆண்டு முதல், பத்திரப்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு, வழிகாட்டி மதிப்பும் பூஜ்யமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால், பத்திர பரிவர்த்தனை செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளோம். இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து, குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து, எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X