திருமண ஆசை காட்டி பெண்ணிடம் நகை சுருட்டல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம்: திருமண ஆசை காட்டி, பெண்ணிடம் 22.5 பவுன் நகை மற்றும் பணத்தை சுருட்டிய புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன், 47, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. திருப்பூர் மாவட்டம் குன்னத்துார் போஸ்ட் ஆபீஸ் வீதியில் குடும்பத்துடன் தங்கி பெருமாநல்லுார், பசுமை நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா

அனுப்பர்பாளையம்: திருமண ஆசை காட்டி, பெண்ணிடம் 22.5 பவுன் நகை மற்றும் பணத்தை சுருட்டிய புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன், 47, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. திருப்பூர் மாவட்டம் குன்னத்துார் போஸ்ட் ஆபீஸ் வீதியில் குடும்பத்துடன் தங்கி பெருமாநல்லுார், பசுமை நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்.இவர் பணியாற்றிய இடத்தில் அதே பகுதியை சேர்ந்த முதுகலைப் பட்டதாரியான, திருமணமாகாத 33 வயது பெண்ணிடம், ''எனக்குத் திருமணம் ஆகவில்லை. ஏரோநாட்டிக்கல் படித்துள்ளேன்.விமான நிலையத்தில் வேலை கிடைத்துள்ளது. முன் பணம் கட்டும்படி கூறுகின்றனர். பணம் கட்டினால் வேலை கிடைத்து விடும். வேலை கிடைத்ததும் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்'' என கூறியுள்ளார். அப்பெண்ணிடமிருந்து, சிறிது சிறிதாக 22.5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.இந்நிலையில், கண்ணன், திடீரென தலைமறைவானார். பெண்ணின் பெற்றோர் பெருமாநல்லுார் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணனைத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த கண்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 பவுன் நகையை மீட்டனர்.விசாரணையில் கண்ணன் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X