பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை சுரங்கப்பாதையில் மழை நீர்; நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது

Added : நவ 15, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை ரயில்வே சுரங்கப்பாதையில் நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி நிற்கிறது.தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இதனை அகற்றாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.சிவகங்கை -= தொண்டி ரோடு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. இந்த ரோட்டிலுள்ள ரயில்வே கேட் மூடப்படும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பிரச்னையை தவிர்க்க இங்கு சுரங்கப்பாதையுடன் கூடிய கடந்த
 சிவகங்கை சுரங்கப்பாதையில் மழை நீர்;   நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது


சிவகங்கை : சிவகங்கை ரயில்வே சுரங்கப்பாதையில் நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி நிற்கிறது.

தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இதனை அகற்றாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.சிவகங்கை -= தொண்டி ரோடு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. இந்த ரோட்டிலுள்ள ரயில்வே கேட் மூடப்படும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பிரச்னையை தவிர்க்க இங்கு சுரங்கப்பாதையுடன் கூடிய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது.

பாலம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் மழை காலங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோடு,தொண்டி மேம்பாலத்தில் சேகரமாகும் மழை நீர் இந்த சுரங்க பாதையில் தான் வந்து விழுகிறது. சுரங்கப்பாதையில் சில நேரங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி விடுவதால் தண்ணீர் வற்றும் வரை பாலத்தின் கீழ் பகுதி வழியாக மக்கள் செல்ல முடியாது.

நெடுஞ்சாலைதுறை, நகராட்சியினர் தண்ணீரை அகற்றுவது எங்கள் வேலை இல்லை என ஒதுங்கி கொள்கின்றனர். மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க இது வரை நடவடிக்கை இல்லை. மழை பெய்தாலே சிவகங்கை மக்கள் அதிருப்திக்குள்ளாகும் நிலை தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X