சி.என்.ஐ., திருப்பூர் கேலக்சி துவக்கம்| Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

'சி.என்.ஐ., திருப்பூர் கேலக்சி' துவக்கம்

Added : நவ 15, 2021
Share
திருப்பூர்: 'கன்ஸ்ட்ரக்சன் நெட்வொர்க் ஆப் இந்தியா' அமைப்பின் திருப்பூர் கேலக்சி கிளை துவக்க விழா நடந்தது.தேசிய அளவில் இயங்கி வரும் 'கன்ஸ்ட்ரக்சன் நெட்வொர்க் ஆப் இந்தியா (சி.என்.ஐ.,) அமைப்பின் மூன்றாவது கிளை,'சி.என்.ஐ., திருப்பூர் கேலக்சி' கிளை துவக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை விழா நேற்று நடந்தது.காங்கயம் ரோடு ஜிஞ்சர் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,

திருப்பூர்: 'கன்ஸ்ட்ரக்சன் நெட்வொர்க் ஆப் இந்தியா' அமைப்பின் திருப்பூர் கேலக்சி கிளை துவக்க விழா நடந்தது.தேசிய அளவில் இயங்கி வரும் 'கன்ஸ்ட்ரக்சன் நெட்வொர்க் ஆப் இந்தியா (சி.என்.ஐ.,) அமைப்பின் மூன்றாவது கிளை,'சி.என்.ஐ., திருப்பூர் கேலக்சி' கிளை துவக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை விழா நேற்று நடந்தது.காங்கயம் ரோடு ஜிஞ்சர் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைப்பின் நிறுவன தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். திருப்பூர் கிளையின் முதன்மை செயல் அலுவலர் விக்னேஷ் வரவேற்றார்.கோவை மண்டல பொறுப்பாளர் லிங்கராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் சி.என்.ஐ., அமைப்பில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.கட்டுமான தொழில் துறை சார்ந்த பல்வேறு பிரிவினர் இதில் கலந்து கொண்டனர். தொழிலின் தற்போதைய நிலை குறித்தும், அமைப்பு ரீதியான பணிகள் குறித்தும் இந்நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X