அச்சுறுத்தும் பாலம்!| Dinamalar

அச்சுறுத்தும் பாலம்!

Added : நவ 15, 2021
Share
பொங்கலுார்: பொங்கலுார் பி.ஏ.பி., வாய்க்காலில் ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச் செல்வதற்காக ஆங்காங்கே இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பொங்கலுாரில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் துருப்பிடித்து ஓட்டை விழுந்துள்ளது. பாலத்தின் இரு புறங்களிலும் இருந்த கம்பிகள் கழன்று விழுந்து விட்டன. இதனால், அந்தப் பாலத்தில் வாய்க்காலை கடப்பது ஆபத்தானது. பி.ஏ.பி.,

பொங்கலுார்: பொங்கலுார் பி.ஏ.பி., வாய்க்காலில் ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச் செல்வதற்காக ஆங்காங்கே இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பொங்கலுாரில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் துருப்பிடித்து ஓட்டை விழுந்துள்ளது. பாலத்தின் இரு புறங்களிலும் இருந்த கம்பிகள் கழன்று விழுந்து விட்டன. இதனால், அந்தப் பாலத்தில் வாய்க்காலை கடப்பது ஆபத்தானது. பி.ஏ.பி., வாய்க்காலில் பலர் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.இரும்பு பாலத்தின் வழியாக செல்லும் பொதுமக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ள நிலையில், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பாலங்களையும், பழுதடைந்த பாலங்களையும் அகற்ற பொதுப்பணித் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழப்பு தவிர்க்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X